பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380. - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் டிருந்தார். நான் அவர்கள் சமயத்தை வெளியில் பரப்புமுன் இந்த நாட்டில் வாழும் தமிழ்ச் சமுதாயத்திடம் பரப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். நான் மேலே காட்டியபடி ந்ம் தமிழரில் சிலர், அங்குமட்டுமன்றி இங்கும் "தாய்க்கொலை சால்புடைத்து என்பாரும் உண்டு' என்ற" முது மொழியைப் பின் பற்றுகிறவர்களாதலின் அவர்களைத் திருத்த வேண்டும் என்றேன். அவரும் ஓரளவு இங்குள்ள தமிழர் பற்றி அறிந்தவராதபின், என் கருத்தை ஏற்றுக் கொண்டார். எனினும் என்ன செய்வார்கள் என்பது தெரியாது. பின் 9மணிக்கு நடராசருக்கு தீபாராதனை நடைபெற்றது. நம் ஊர் ஐயர்தான். 3மணிக்கு ஒருமுறை 24 மணிநேரமும் நடைபெறுகிறது) கூத்தப் பெருமானையும் இருபுறமும் உள்ள அவர்தம், மக்களையும் வணங்கி, 9.30க் கெல்லாம் துயிலச் சென்றேன்.