பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த மடம்-ஹாவாய் 28.5.85 காலையில் துயிலெழுந்தவுடன் கடன்களை முடித்துக் கொண்டு குறிப்பு எழுதி முடித்தேன். பூசை செய்யும் ஐயர் தந்த காலைச் சிற்றுண்டி கொண்டேன். இன்னும் இங்குள்ள மடத்துத் தலைவரைக் காணவில்லை; இன்று பத்துமணிக்குக் காணலாம் என்றனர். காலைச் சிற்றுண்டி தனியாகச் செய்து தந்தனர்; உண்டோம்; பின் இங்கே கோயில்பூசை செய்யும் திரு. குமாரசாமி குருக்கள் என்பவரிடம் சிறிதுநேரம் உரை யாடிக் கொண்டிருந்தேன். இங்கே கும்பாபிஷேகம் செய்வதற் காக அவர் அழைத்து வரப்பெற்ற விதத்தினையும் இங்கே உள்ளவர் கொள்கைக்கும் தம் கொள்கைக்கும் உள்ள முரண்பாடு பற்றியும் விளக்கி உரைத்தார். நடராசன் சிவலிங்கம், விநாயகர், முருகன், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோரை இங்கே மூர்த்திகளாக வழிபட்ட போதிலும் இவர்கள் கொள்கையில் வேதாந்தவாடை விசுவதறிந்தேன். திருக்கோயில் அழகாக உள்ளது. முன்னே பெரிய நந்தியும் கொடி மரமும் உள்ளன. அழகிய விநாயகர், முருகன், சிவலிங்கமும், நடராசன் உமாமகேச்சுவரர் விக்கிரகங்களும் உள்ளே உள்ளன. மற்றொரு பக்க வாயிலில் திருவள்ளுவர், திருமூலர் உருவங்கள் உள்ளன. இந்த இடம் ஒரு குன்றின் மேல் உள்ளது. அங்கிருந்து எதிர் நோக்கின் அழகிய பள்ளத்தாக்கும் அதில் சலசலத்து ஒடும் கானாறும் எங்கும் பசுமை நிறைந்த சோலைகளும் தூரத்தே கரும்பு, சோளம், பயிராகும் பசும் வயல்களும் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தா யமைந்தன. இங்கே பக்கத்திலேயே தோகை