பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த மடம் ஹவாய் 2 9-5-85 இன்று காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பலருக்கு எழுத வேண்டிய கடிதங்களை எழுதி முடித்தேன். இந்த நாட்டில் அஞ்சல் துறை ஒன்றுதான் அரசாங்கத்தின் நேர்ப் பார்வையில் அமைந்துள்ளது. எனவே சரிவர உரிய நாளில் அஞ்சல்கள் பெற முடிவதில்லை. சீயேட்டலில் 6-5-85 எனக்கு அனுப்பியது சிகாகோவிற்கு 15-5.85ல் வந்ததைப் பற்றி முன்னரே குறித்தேன். ஆகவே இங்கும் நான் எதிர் பார்த்த அஞ்சல்கள் (ஊரிலிருந்தும் பிற இடங்களிலிருந்தும் இன்றுவரை வரவில்லை மாலை வரலாம் என்றனர். சிறிது ஒய்விற்குப்பிறகு பகல் 12மணிக்குக் கோயில் வழிபாட்டிற்கு வரச்சொன்னார்கள். நாள் முழுதும் கோயில் திறந்திருக் கும்; மூன்று மணிக்கு ஒருமுறை வழிபாடு நடைபெறும். மாலை 6மணி முருகர். 9மணு நடராசன், 12மணி அர்த்த நாரீச்சுவரர் விடியல் 3.மணிவிநாயகர் 6மணி முருகர் 9மணி நடராசன், 12மணி அர்த்த நாரீச்சவர் மால்ை 3மணி விநாகர் என்று முறையாக நான்கு மூர்த்திகளுக்கு வழிபாடு செய்கின்றனர். அனைத்தும் கோயிலில் ஒன்றை ஒன்று சார்ந்தே நிற்கின்றன. 12ம்ணிக்கு அர்த்தநாரீச்சுவரர் பூசை ,மணிநேரம் நடைபெற்றது. பிறகு சுவாமி கதிர் அவர்கள் என்னுடன் 2மணி வரையில் இருந்து பல சமய உண்மைகளைப் பற்றி ஆராய்ந்ததோடு, தம் திருமடம் சமய வளர்ச்சிக்குச் செய்யும் தொண்டுகளை விளக்கினார். மொரிஷியஸ், மலேயா ஆகிய இடங்களில் இவர்கள் மேற் கொண்டுள்ள தொண்டுகளைப் பற்றியும் பலர் மீண்டும்