பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் அவை உணவு கொள்ளும் நிலையினைக் கண்டு - அப்படியே எதிரில் முகில் தவழும் பசுமையும் வளமும் நிறைந்த குன்று களைக் கண்டு - இயற்கையை - இறைவனை - முருகனை - என்னைவிட்டு எப்போதும் பிரியாது உறையும் பிரானை நினைத்துக் கொண்டே தங்கும் அறைவந்து சேர்ந்தேன். மாலை நான்கு மணிக்கு மற்றொரு துறவியுடன் சமய ஆராய்ச்சி இருந்தது. மறுபடி ஏழு மணிக்கு நேற்று விட்ட முருக அடிகளுடன் ஆய்வு உண்டு. மாலை 4மணி முதல் 5-30 வரையில் அவருடன் பல பொருள்கள்பற்றி ஆராய்ந்தேன். முதலில் அவர்கள் இந்த மடத்தை நிறுவிய தன்மையினை யும் நோக்கத்தையும் வெளியிட்டதோடு, பயிற்சி வகுப்பிற் குத் தயாரித்த பாடங்களைப் பற்றியும் சொன்னார்கள். நான் அவற்றை முன்னரே கண்டமை கூறவே அவற்றை விட்டு, அடுத்த இரண்டாம் பகுதியைக் காட்டினர். அதில் இறைவனை அடையும் வழிகள் பலவற்றை விளக்கி, ஒவ்வொன்றிற்கும். பெரிய புராண நாயனார் ஒருவரை ஏதுக் காட்டி எழுதி இருந்தது. மேலும் சமயம் வாழ்வொடு பொருந்தியது எவ்வாறு என்பதும் குறிக்கப்பெற்றிருந்தது. நானும் அவை பற்றிய பல்வேறு கருத்துக்களை எடுத் துரைத்தேன். பின் இங்கே அமெரிக்க நாட்டுச் சைவர்கள் - சிறப் பாகத் தமிழகக் சைவர்கள் தம் சமயத்தை நழுவவிடும் கொடுமையைப் பற்றி விளக்கினர். 50 பேருக்குச் சமய உண்மைகளை விளக்கும் முதல் நூலையும் சமய நெறி பற்றிய குறிப்பினையும் அனுப்பியும் ஒருவர்கூட அதைப் பெற்றுக் கொண்டமை பற்றியும் எழுதவில்லை என்றனர். எனக்கு.இந்த நிலை முன்னரே ஒரளவு தெரிந்ததாதலின், நான் பலவிடங்களில் கண்ட சமயம் - தமிழ் இவை மறந்த மக்களை எப்படியும் திருத்த முயலவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். பல ஆயிரம் தமிழ்ச் சைவர்கள் வாழும் இந் நாட்டில் இதனை எண்ணினேன். நம் நாட்டிலும் என்ன வாழ்கிறது? மடங்கள் என்ன செய்கின்றன? மற்றவர்கள்?