பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உண்டு என்ற நிலை இருப்பதோடு, செய்வன திருந்தச் செய்யும் உளப்பண்பு உள்ளமையே இவர்கள் நாட்டை உலகில் உயர்த்துகின்றது. இவை இல்லாத காரணத்தால் நம்நாடு எங்கோ எப்படியோ சென்று கொண்டிருக்கின்றது. செல்லும் வழியெல்லாம் நிலத்தின் செழுமை தெரிந்தது. கடந்த ஒன்றரை மாதங்களாக இச் செழுமையைக் கண்ட நான். எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்ல வாழிய நிலனே' என்ற சங்க காலப் புலவரின் அடிகளை உள்ளத்தில் நினைந்து, இந்நாடு இன்னும் சிறக்கட்டும்; மக்கள் தனி வாழ்வும் செம்மையாகட்டும் என வாழ்ந்தேன். பார்க்கு மிடமெல்லாம் தென்னஞ் சோலைகள் - கருப்பஞ்சாலைகள்இந்தத் தீவில் மட்டும் மூன்று சர்க்கரை ஆலைகள் இருக் கின்றன என்றால் நம்ப முடிகிறதா? இப்படியே எல்லா வகையான தொழில்களும் இங்கே வளர்கின்றன: மக்கள் வளமாக வாழ்கின்றனர். பழுமரம் நாடும் பறவை போலப் பல நாட்டுமக்கள் இங்கே பறந்தோடி வந்து வாழ்கிறார்கள். வாழ நினைக்கிறார்கள். நாடென்ப நாடா வளத்த" என்று வள்ளுவர் இதை எண்ணித்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னாரோ என எண்ணினேன். அதை உண்மையாகக் காட்டுமாறோ எனோ இக்காவாய்த் திருமடத்தில் முன் திருவள்ளுவர் தம் 8 அடி உயரமுள்ள உயர்சிலையில் நூல் வடிப்பது போன்று காட்சியளித்து. நிற்கின்றார். இம்மடத்தின் வாயிலில் ஒருபக்கம் திருமூல வரும் ஒரு பக்கம் திருவள்ளுவரும் இருந்து அனைவரையும் வாழ்த்தி வாழ வைக்கின்றனர். ஆம்! இருவர்தம் பிறப்பும் முடிவு கட்டப்பெறா நிலையில் - இருவரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்கள் இயற்றிய நிலையில் - இருவரும் வாழ்ந்த காலத்தையும் கணக்கிட முடியாத நிலையில் - இருவரும் வையம் வாழப் பெரு நூல்கள் செய்த நிலையில் இவர்களைப் போற்றி, வடித்து, இங்கே நிறுத்தி, உலகம் உய்ய இவர்கள் காட்டியதைக் காட்டும் இத்துறைவியரைப் போற்றினேன். - -