பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம் - ஹாவாய் 30.5-85 395 தத்துவம் பேசி, சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதே' அச்சமயம் தமிழகத்திலிருந்து அடியோடு மறையக் காரணமா யிற்று என்பதையும் விளக்கினேன். ஆக்க நெறிக்கு உடனிருந்து ஆவன செய்வதாகச் சொன்ன்ேன். அவர்கள் தேவாரம் திருவாசகம் போன்ற திருமுறைப் பாடல்கள் பற்றிய நல்ல பெயர்ப்பு தேவை என்றனர். தமிழ்ப் பல்கலைக் கழக வாயிலாகவோ வேறு வழியிலோ அதைச் செய்ய வாய்ப்பு உண்டு என்றும் உணர்த்தினேன். இறைவழிபாட்டில் இங்கே வடமொழியே வழக்கத்தில் உள்ளது. சைவ சித்தாந்தத்தை உண்மையில் அறிய வேண்டுமாயின் தமிழ் பயின்று, அதிலுள்ள நூல்களை ஆராய்ந்து காணவேண்டும் எனவற்புறுத்தினேன். என்னுடன் பேசிக் கொண்டிருந்த கதிர் அடிகளார் தாம் தமிழ் பயின்று வருவதாகவும் விரைவில் தெளிவு பெறக் கூடும் என்றும் கூறினர். மேலும் நான் திருக்கோயில் வழிபாட்டின் இடை யில் தமிழ்ப்பாடல் பாடவேண்டுமெனக் கேட்டுக் கொண்டேன். இனி அப்படிச் செய்வதாகவும் எளியதான பாடல்களை எழுதித் தருமாறும் கேட்டனர். நாளையே நான்கு மூர்த்தங்களுக்கும் நான்கு பாடல்கள் தருவதாகச் சொன்னேன். இவ்வாறு பல பொருள்கள் பற்றி ஆய்ந்து, அடிகளாரிடம் விடை பெற்றுக் கொண்டு அறைக்கு வந்து 'துயிலச் சென்றேன். .