பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவசித்தாந்த மடம்-ஹாவாய்த்தீவு 31.5.85 இன்று காலை வழக்கம்படி எழுந்து கடன்களை முடித்துக் கொண்டேன். இன்று மாலை புறப்படுவதாக இருந்ததை மாற்றி, நாளை காலை 7மணிக்கு இங்கே புறப்பட்டு, ஹானலூலு சென்று அங்கிருந்து 10 45க்கு ஜப்பான் புறப்பட ஏற்பாடு செய்யப் பெற்றது. மாலை நான்கு மணிக்குச் சொக்கலிங்கம் இறைவனுக்கு அபிடேகம் செய்ய ஏற்பாடு செய்தார். நானும் அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்தேன். காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு இங்கே அச்சிடும் அச்சகத்தைப் பார்க்க நினைத்தேன். மடத்துத் தலைவர் அவர்களும் வழியிடைப் பார்த்து அச்சகத்தைக் காண வேண்டும் என வற்புறுத்தினர். உள்ளே சென்றேன். அனைத்தும் கம்பியூட்டர் வழியே அச்சாகின்றன. நால்வர். அனைவரும் துறவிகளே. பணி செய்திருந்தனர். அருட்டிரு. கதிர் அடிகளார் பொறுப்பில் அவை இயங்குகின்றன. மிக எளிதில் தேவையானவற்றை அச்சிட வசதி செய்யப் பெற்றுள்ளது. அச்சிடுவது, வெட்டுவது, மடிப்பது முதல் அனைத்துமே இயந்திரங்கள் கொண்டே நடைபெறுகின்றன. குறைந்தது இருபது ஆட்கள்செய்யும் பணியினை இந்த இயந்திரங்களின் உதவியால் இருவரே செய்து முடிக்கின் றனர். வேலைக்கு ஆட்கள் கிடைக்காத நாட்டில் - கிடைத் தாலும் தாளாத நாட் கூலி தரவேண்டிய நாட்டில் . இந்த இயந்திரங்களே சிறந்த வரப்பிரசாதமாக அமைகின்றன. பல கடிதங்களும் கம்பியூட்டர் மூலமே "டைப்' செய்யப் பெற்று (படியுடன்) விரைந்து அனுப்பப் பெறுகின்றன. படி,