பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 1, 2-6-85 இன்று காலை 4 மணிக்கு முன்பே படுக்கையைவிட்டு எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நான் இருந்த அறையினையும் துப்புரவு செய்து, பயணத்துக்கு ஏற்பாடு செய்து முடித்தேன். மணி 5-30 ஆயிற்று' குருக்கள் காலை எழுந்து எனக்குப் பால் கலந்த உணவும் காப்பியும் தயார் செய்தார். அருந்தினேன். நான் புறப்படு முன் இம் மடத்தின் தலைவரைக்கண்டு செல்லல் நலம் எனவும் காலை 5-45க்குக் காணலாம் எனவும் சொன்னார் கள். அப்படியே அவர் தங்குமிடம் சென்றேன். பிற துறவியர் அனைவரும் புடைசூழத் தலைவர் அவர்கள் வீற்றிருந்தார்கள். (நாள்தொறும் காலை ஒருமணி நேரம் அனைவரும் கூடி, வழிபாடாற்றித் தத்தம் கடமைகள் பற்றியும் ஆய்வார்களாம்). தலைவரையும் மற்றவர்களை யும் கைகூப்பி வணங்கி, அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டேன். அதற்குள் மு. ய ல் வார் (Sataga - என அழைப்பார்-துறவியாகும் முன்நிலை) காரினைத் தயாராகக் கொண்டுவந்தார். சரியாக 6 மணிக்குப் புறப்பட்டு 6-30க்கு விமான நிலையம் வந்து சேர்ந்தேன். இடையில் இயற்கைக் காட்சியில் தோய்ந்து என்னை மறந்தேன். சிறு தீவாயினும் வேண்டிய அனைத்தையும் நல்கும் இத் தீவை நினைத்தேன் விமான தளத்தில் எனை விட்டு அடிகளார் விடைபெற்றுச் சென்றார். நானும் விமானம் ஏறி 7 மணிக்குப் புறப்பட்டு 7-30க்கு ஹானலூலூ வந்து சேர்ந்தேன். (Inter Island. Service) விமானநிலையத்தில் பலவகையான் ஐஸ் க்ரீம்'கள்