பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மாமிச உணவுப்பொருள்கள், வற்றல்கள், அன்னாசிப் பழங்கள் போன்றவை மலைபோல் அடுக்கி வைக்கப் பெற்றிருந்தன. இவை யாவும் ஜப்பானுக்கு ஏற்றுமதியா கின்ற்னவாம். முன்னேற்றம் காணும் அந் நாட்டில் ஐஸ்கிரீமுக்கும் பஞ்சமா என்று அங்கே அவற்றைச் சரிபார்க்கும் ஜப்பானியரைக் கேட்டேன். பஞ்சமில்லை என்றாலும் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு. என்ன விலை யானாலும் வாங்குவர் என்றார். அப்படியே பிறபொருள் களும. நிலையத்திலும் இதுவரையில் கண்ட நிலைக்கு மாறாக அதிக ஜப்பானிய மக்களே இருந்தனர். சில சீனாக்காரரும் பிலிப்பையன் மக்களும் இருந்தனர். இந்த நிலைத்தில் பூக்களை மாலையாக அணிந்து கொள்வார் பலர் இருந்தனர். நான்கு காசு தாளாத மலர் களையெல்லாம் - காட்டு மலர்களையெல்லாம் மாலைக ளாக்கி நான்கு ரூபாய்க்கு விற்கும் நிலைக் கண்டேன். ஜப்பானியர் இவற்றை அணிவதில் மகிழ்ச்சி கொள்ளுகின் றனர். மற்றவருள் ஒரு சிலரும் அப்படியே. (இம் மலர் பற்றிக் கவாய் கோயிலில் நடைபெறும் வியாபாரம் பற்றி முன்னரே குறித்தேன். நிறைய மலர்கள் தம்மிடமே இருந்தும், சாதாரண மலருக்கு நாளுக்கு 2 டாலர் தரும் அவர்கள்ை எண்ணினேன்.) - இங்கிருந்து டோக்கியோ செல்ல, ஜப்பான் விமானத் (அரசாங்கம் நடத்துவது 51% முதலீடு)தில் செல்ல வேண்டும். பெட்டியை நேராக டோக்கியோவிற்கே அனுப்பச் சொல்லி விட்டமையால் சிறிது தூரம் நடக்க நேர்ந்த போதிலும் தொல்லை இல்லை. பெரு விமான Élso avuš Gáb (International Airport) egủurreir estuom sr$ துறையினரிடம் சென்றேன். அங்கே பணிபுரிகின்ற அனைவரும் மிக அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர். பேராசிரியர் என்பதால் செல்லுமிடமெல்