பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 3-6.85 விடியற் காலை 4மணிக்கே எழுந்து பிற கடன்களை முடித்துவிட்டு 5 மணிக்குக் குளிக்கச் சென்றேன். குளியல் அறை பூட்டியிருந்தது.(YMCAவில் எல்லாம் பொதுக்குளியல் அறைகள்தாம் உள்ளன போலும்) முகப்பில் மாலை 5 முதல் இரவு 12 வரை திறந்திருக்கும் என்ற குறிப்பு இருந்தது. நான் விழித்தேன். பின் கீழிறங்கிக் காவலரிடம் சொன்னேன். அவர் வந்து திறந்து கொடுத்தார். பின் குளித்து, 7மணிக்குள் இந்தக் குறிப்பினையும் எழுதிமுடித்துப் பிற பணிகளையும் மேற் கொண்டேன். 10 மணிக்குள் தயாராக வேண்டுமல்லவா! இன்றுடன் இருமாதங்கள் முடிவடைகின்றன: இடையில் ஒருவாரம் உள்ளது ஊர் செல்ல என நினைத்தேன். பிறகு சிற்றுண்டி உட்கொண் டேன். சரியாக 9.30 மணிக்கு பேராசிரியர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். முன்னாள் சொன்னபடி, எதிர் பாராத வேலைகளின் காரணத்தால் காலை 10 மணி அளவில் பேச இயலவில்லை எனவும்.10.30க்குத்தம் மாணவர் ஒருவரை அனுப்புவதாகவும் காண வேண்டுவகண்டு மாலை 4 மணிக்குப் பல்கலைக் கழகம் வந்தால் நல்லது என்றும் சொன்னார். அப்படியே அம் மாணவரும். (திரு. சுகிரா ஹாயாழl) 10.30க்கு வந்தார். பக்கத்திலுள்ள வங்கியில் இந்நாட்டு நாணயமாற்றம் செய்து கொண்டேன். (ஒரு நிமிடம்கூடக்காக்க வைக்காமல் உடனுக்குடன் எந்த வேலை யையும் முடித்து அனுப்புகின்றனர்) பின், வந்தவருடன்