பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

έg ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மேலும் அப் பல்கலைக் கழகத்தை அடுத்து-கழக அமைதி யைக் காக்கும் வகையில்-பரந்த நிலப்பரப்பு விடப் பெற்றி ருந்தது. அதன் நடைமுறைகளைக் காண வந்த எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லையே என வருந்தினேன். ஈஸ்டர் விடுமுறையாதலால் வேறு பள்ளிகளையும் காணமுடிய வில்லை. - வழிநெடுக, பலகட்டிடங்கள் பழமையும் புதுமையும் கலந்து நின்றன. பழைய நகர் மலைச்சரிவில் இருந்தமையின் தெருக்கள் வளைந்தும் குறுகலாகவும் சென்றன. அங்கே நினைவுச் சின்னமாகப் போற்றப் பெறத்தக்க பல கட்டிடங் கள் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்கின்றன. 1602ல் கட்டிய கட்டிடங்களும் வழிபாட்டிடங்களும் உள்ளன. ஒரு கோயில் பொற்கோயில் என்னுமாறு உயர்ந்த பொற்சிகரங் கள் ஐந்தினைப் பெற்றுச் சிறந்து நிற்கின்றது. ஓரிடத்தில் மிகப் பழைய கோட்ட்ை போன்ற கட்டிடத்தில் எங்களை யெல்லாம் இறக்கிப் பல காட்சிகளைக் காட்டினர். மிகப் பழங் காலத்திய (12, 18, 14 நூற்றாண்டாகலாம்) பீரங்கி கள் பல நிறுத்தப்பெற்றிருந்தன; மிகப் பெரியனவாக மூன்று உள்ளன. அவையாவும் பழங்காலப் போர்ச் சின்னங்களாகப் பாதுகாக்கப் பெறுகின்றன என்றனர். உரோம, கிரேக, ப்ோர்ச்சுகீசிய, பிரஞ்சு நாடுகளுக்கு இடையில் இங்கே பல போர்கள் பிற்காலத்தில் நடைபெற்றன என்றும் அவற்றைக் குறிக்கும் சின்னங்கள் பல எனவும் எங்களுக்கு விளக்கக் கூறிய அம்மையார் உரைத்தார். மிக உயர்ந்த நீல மாளிகை யினைக் காட்டி, அங்கே தொழிலாளர் நலக் கழகம் இடம் பெற்றுள்ளது என்றார். பிற பெருங் கட்டடங்களையும் உலக வரலாற்றொடு அவை கொண்ட தொடர்புகளையும் ஒரளவு எடுத்துரைத்தார். இவ்வாறு பலப்பல இடங்களைக் கண்ட நாங்கள் புறப்பட்ட இடத்துக்கே 12 மணி அளவில் வந்து சேர்ந்தோம். ஆானம் மேகத்தால் மந்தாரமாக இருந் தமையின் நான் மேலும் மாலையில் வேறு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளவில்லை.