பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் கல்வி நிலையங்களைக் காண விழைந்தேன். அவருக்கு எந்தப் பள்ளியும் தெரியாது என்றும் தெரிந்தாலும் முன் அறிவிப்பும் இசைவும் இன்றிச் செல்ல இயலாதென்றும் கூறினர். கல்வி இயக்குநர் அலுவலகம் செல்லலாம் என்றா லும் அதுவும் தெரியாதென்றார். நல்ல வேளை அவர் நண்பர் திரு. தகாபீமீகிமுரா என்பவர் - அலுவலகப் பணி யாகச் செல்பவர் எதிர் வந்தார். அவரிடம் சொல்லவே, அவர் தமக்குக் கல்வி இய்க்குநர் அலுவலகம் தெரியுமென்று சொல்லி, அவர்தம் அலுவலகத்துக்குத் தொலைபேசிவழியே காலம் தாழ்த்து வர இசைவு பெற்று, எங்களுடன் வந்தார். மூவரும் பாதாளரயிலில் சென்றோம். பாரிஸ், லண்டன், நியுயார்க்குப் பிறகு இங்கேதான் பாதாள ரெயிலில் செல்ல வேண்டி இருந்தது. உரிய இடத்தில் விட்டுவிட்டு, வந்தவர் சென்றார்: நாங்கள் உள்ளே சென்று கேட்டறிந்து துணைக் கல்வி இயக்குநர் திரு. இட்டேடாக்கா சானோ (Hide Taka Sano) என்பவரைக் கண்ட்ோம். அவர்கள் தாம் இருந்த அறையை விட்டு வெளிவந்து, தகவல் தரும் துறைக்கு அழைத்துக் கொண்டு சென்று அங்கிருந்த இருநூல்களைத் தந்தார். அதில் இந்நாட்டு.ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி பல்கலைக் கழகக் கல்வி வரை எப்படிச் செயல் பெறுகின்றது என்ற தகவல்கள் இருந்தன. எனினும் அதில் முக்கியமான ஒரு நூலின் தனிப்படி இல்லை எனக் கூறி வெளியில் வாங்கிக் கொள்ளச் சொல்லி இடமும் குறித்துத் தந்தார். அத்தகைய உயர் பதவியிலுள்ள அவருக்கோ அவர் துணையாளருக்கோ - யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. நல்ல வேளை, என்னுடன் வந்தவர் ஆங்கிலமும் ஒரளவு அறிந்தவராதலின் என் கருத்தினை அவர்களுக்கு விளக்கி வேண்டிய உதவி களைப் பெற்றுத் தந்தார். துணை இயக்குநர் சிறிது நேரம் இருந்து தேநீர் தந்து வாழ்த்தி (ஜப்பான் மொழியில்தான்) வழி அனுப்பினார். கடையில் அந்த நூலை வாங்கப்புறப் பட்டோம். வழியில் அஞ்சலகம் சென்று, ஊருக்குத் தபால் எழுதிவிட்டுப், பிறகு நூல் விற்பனை நிலையம் சென்றோம். அங்கும் அந்த நூல் இல்லை எனக்கூறி, தனித் தனியாக