பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பாதைகளும் போட்டவண்ணம் இருக்கின்றனர். நேற்று விமான நிலையத்திலிருந்து வந்தபோது பல புதிய சாலைகள் பணியிடை வளர்வதைக் கண்டேன். அகநகரில் நாங்கள். சென்றபோது, சாலைகளில் மட்டுமின்றி, ஓடைகளிலும் படகுகள் மூலம் வாணிபம் நடைபெறக் கண்டேன். பிற்பகல் உணவுக்குப் பிறகு நேரம் இருந்ததால் நாட்டின் சிறந்த பொருட் காட்சியினைக் (Museum) காண நினைந்து வாடகை மோட்டாரில் சென்றோம். ஆயினும் அங்கே சென்று கண்டபோது. திங்களன்று அவை மூடப் பெறும் விடுமுறை நாள் என அறிந்தோம். என்னுடன் வந்த மாணவர் நல்லவரே. ஆயினும் அவருக்கு ஒன்றும் தெரிய வில்லை. இன்றேல் இன்னும் பல இடங்களைக் கண்டிருக் கலாம். காட்சிச் சாலை இல்லை எனவே இந்நகரின் பெரிய பூங்காவினுள் புகுந்தோம். அதன் வழியாகவே பல்கலைக் கழகம் செல்லலாம் என்றார். எனவே சோர்விலும் தளராது. சாலை நிழலில் நடந்தேன். இங்கே சற்று வெய்யில் கடுமையாக இருந்தது. மெள்ள, பூங்காவின் சாலை களினுள்ளே செல்லும்போது வழியிடை பெரிய நீர்த் தேக்கம் கண்டோம், அதில் பல படகுகளில் காதலர் களி நடம் புரியப் படகோட்டி மகிழ்ந்தனர்; சாலைகளிலும், அவ்வாறே. எனவே இது காதலர் பாதை என்றேன். அவரும் ஆம் என்றார். புதுமணத் தம்பதிகள் தேன்பிறை நாட்கள் கொண்டாடுவது போன்று இங்கே வந்து மகிழ்வார்களாம். பூங்காவும் அழகாக இருந்தது. பலர் ஆங்காங்குள்ள பலகை களின் மேல் படுத்து உறங்கினர். வழியிடை இந்நாட்டுப் பெருங் கோயில் (அதிட்ட அன்னை) (Godess of Fortune) ஒன்றினைக் கண்டோம். அது புத்தர் கோயிலன்று. இந்நாடு புத்தர் பிரான்ைப் போற்றும் நாடாயினும் பிறதெய்வ வழிபாடுகளும் உள்ளன. புத்தர் பிறந்த நம் நாட்டில் அந்த மதம் வாழவில்லையாயி னும் இங்கேயும் அண்டை நாடாகிய சைனாவிலும் அது சிறக்க வாழ்கின்றது. எனினும் அவர் கொள்கையாகிய