பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 3-6-85 409 கொல்லாமை இங்கே போற்றப் பெறவில்லை. எல்லாச் சமயங்களும் அப்படித்தான்ே. கொள்கைகளைக் காற்றில் விட்டு, சடங்குகள், வெளிவேடங்கள் இவற்றைக் கொண்டு தானே இன்று சமயங்கள் வாழ்கின்றன. மேலை நாடுகள்.போலவே இந்நாட்டிலும் 18 வயதுக்கு மேல் பிள்ளைகள் தாய் தந்தையருடன் இருப்பதில்லையாம். என்னுடன் வந்தவரும் அப்படிப்பட்டவரே. அவருக்கு 20 வயது இருக்கும். எம். ஏ. பயில்கிறார். எனினும் இவரே சம்பாதித்துத்தான் வாழ்கிறாராம். கல்லூரி அல்லது பல்கலைக் கழகப் படிப்பிற்கு, அமெரிக்கா நாட்டினைப் போல அவ்வளவு செலவு செய்ய வேண்டியதில்லைபோலும், எனினும் கல்வியின் தரம் மிக உயர்ந்துள்ளது. எனக் கூறினர். ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்லூரிவரையில் அரசாங்க நேரடிப் பர்வையிலேயே உள்ளனவாம். தனிநிலை (Automamus)த் தகுதியும் தனியார் பள்ளிகளும், ஒரே தேர் விற்குப் பலவகையான பாடமுறைகளும் இங்கே கிடைமா. அனைவருக்கும் அரசருக்கும் ஆண்டிக்கும் ஒரே வகையான கல்வி முறைதான். நம்நாட்டை நினைத்துப் பார்த்தேன். தமிழ் நாட்டில் 10வது வகுப்பில்தான் எத்தனை வகையான தேர்வு. எங்கோ உள்ள ஒரு தனிநபர் தேர்வு நடத்தி அனுப் பினாலும் அதுவும் சரி என்று கொள்ளும் பரந்த மனப் பான்மை - மொத்தத்தில் தரத்தின் நிலை? . 3.மணி அளவில் பல்கலைக் கழகம் சென்றோம். வழி, யிடைக் கண்ட பல பிரிவுகளையும் (மருத்துவக் கல்வி உட்பட) கண்டோம். அவர் அறைக்கும் சென்று, தொல்ை பேசி வழி நாளைச் சுற்றுலாவுக்கும் மறுநாள் ஹாங்காங் பயணத்துக்கும் உறுதி செய்து கொண்டோம். திரு. காரசிம்மா அவர்கள் அறைக்குச் சென்றபோது அவர் தம் தனி நூல் நிலையத்தைக் கண்டேன். அங்கே தமிழ் நாட்டைப் பற்றிய பல ஆங்கில நூல்கள் இருந்தன. கல்வெட்டில் வரும் சோழர் காலப் பெயர் பற்றிய விளக்தங் களை இவரே மூன்று தொகுதிகளில் வெளியிட்டுள்ளார்.