பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் என்பவர் (சென்னையில் பெரு வாணிபர்) குடும்பத்துடன் கலந்து கொண்டார். எனவே பயணம் தமிழர்களுடன் அமைந்தது. பஸ் பலரையும் பல ஒட்டல்களில் ஏற்றிக் கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வந்தது. நகர எல்லைக்குள் பல இடங்களையும் எங்களுக்குக் காட்டி விளக்கினர். இந் நாட்டின் நிலை பற்றியும் கேட்டோம். இந் நாட்டில் அரசராக இருந்தவர் இப்போது இல்லை என்பதை முன்பே குறித்தேன். ஐந்து பெரும் கட்சிகள் நாட்டில் உள்ளனவாம். அவற்றுள் (Democratic party) டெமாக் கிரடிக் பார்டியே ஆளும் கட்சியாக உள்ளதாம். தலைமை அமைச்சர் திறம்படச் செயல்புரிகிறாராம். அடுத்து சோஷிய லிஷ்டு கட்சி உள்ளதாம். இவ்வாறு ஆட்சி முறையினைப் பற்றி விளக்கி, கல்வியைப் பற்றியும் கூறினார். டோக்கியோ நகரில் ஒரு கோடியே இருபது இலட்சம் மக்கள் வாழ்கிறார். க்ள் என்றும் 500 மேல் நிலைப் பள்ளிகள் (Junior College), 900 உயர் நிலைப் பள்ளிகள், 15,000 ஆரம்பப் பள்ளிகள் உள்ளன என்றும், அனைத்தும் அரசாங்கமே நடத்துவன என்றும் தனியார் பள்ளிகளே கிடையாது என்றும் பாட நூல்கள் அனைத்தும் அரசாங்கமே வெளியிடுகிற தென்றும் கூறினார். ஆசிரியர் ஒருவருக்கு 45 மாணவர் உள்ளனராம். ஆரம்பப் பள்ளியில் பயில்வோருள் 94 சதவீதம் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லுகிறார்களென்றும் 40 விழுக்காடு மேல் நிலைப்பள்ளிக்கும் அதில் 44 விழுக்காடு பல்கலைக்கழகங் களுக்கும் செல்கிறார்கள் என்றும் கூறினார். அனைத்தும் சரியா என அரசாங்க வெளியீடான நான் வாங்கிய நூல்கள் வழியே கண்டறிதல் வேண்டும்) எனினும் இங்கே கட்டாயக் கல்வி திட்டமாக அமுலில் இருப்பதால் (நம் நாட்டைப் போலன்று) படிக்காதவர்களே இல்லை எனலாம். நகர் எல்லையில் புகுந்தபோது மேலும் அவர் சொன்னது துணுக்குறச் செய்தது. இங்கே அடிக்கடி எரிமலை குமுறும் என்றும், கடந்த பல ஆண்டுகளாக இல்லாமையால் பலப்பல உயரிய கட்டடங்கள் உயர்ந்