பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ்.ஜினிவா 5.4.85 33. 12 மணிக்குமேல் நான் தங்கிய விடுதிக்கு வந்து தங்கி சிறிது நேரம் கழித்து அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். அங்கே பணிசெய்த பணியாளர் அனைவரும். இன்முகத்தோடு உபசரித்து. திரும்ப வருக! என்ற வாழ்த் தோடுவழியனுப்பினர். பிறகு நான் ரெயிலடிக்கே வந்து அங்கே என் பெட்டிகளை வைத்துவிட்டு, உணவுக்கு எதிரில் உள்ள கீழ் நிலைக் கடைகளுக்குச் சென்றேன். பழங்களுடன் ரொட்டி வெண்ணெயும் காப்பியும் உண்டு, பின் அக் கடை களில் பலவற்றைப் பார்த்துக் கொண்டே மறுபடியும் இரெயிலடிக்கு வந்தேன். அங்கே இருந்து ஆயிரக்கணக்கில் -கூட்டம் கூட்டமாக-பெரும்பாலும் காதல்ர் பிணைப்பாக -மக்கள் செல்வதும் பெரு மூட்டைகளை முதுகில் சுமந்து வெளிநாட்டுப் பார்வையாளர்கள் செல்வதும் இளம் பிள்ளை கள் அங்குள்ள கடைகளிலும், பத்திரிகை நூல் விற்பனை நிலையங்களிலும் கூடி, விளையாட்டுப் பொருள்களையும் நூல்களையும் வாங்கி மகிழ்வதும் காணவேண்டுவன: எனினும் மாலை 5.30க்கு நான் விமான நிலையத்தில் இருக்க வேண்டியவனாதலால் (6.30 பாரிசுக்கு விமானம் புறப்பாடு) நான் 5 மணி அளவில் அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்படும் பஸ்'சில் புறப்பட்டு விமானநிலையம் அடைந் தேன். அங்கே முறைப்படி சோதனைகள் எல்லாம் முடிந்தன. நான் முன்பே குறித்தபடி, இது பெரிய விமான நிலையமாக இல்லையாதலால் (நம் சென்னையைக்காட்டிலும் சிறியது எனலாம்) அதிக மக்கள் கூட்டம் இல்லை. எனினும் நான் ஒரு பக்கத்தே அமர்ந்து, அருமையாக எதிரிலே தெரிந்தபனி மூடிய வெள்ளிய சிகரங்களையும் அவற்றின் சிறப்பினை யும் கண்டு கண்டு மகிழ்ந்தேன். இமயம் சூடிய நம் பணி மலையினைப் பாடிய பழைய தமிழ்ப் புலவர்தம் பாடல் களெல்லாம் நினைவுக்கு வந்தன. இருபத்தெட்டு ஆண்டு களுக்குமுன் காஷ்மீர் சென்றபோது கண்ட பணிச்சிகரங்கள் என் கண்முன் பளிச்சிட்டன. இவ்வாறு பல்வேறு எண்ணங்களுக்கிடையில் நேரம் எனக்கென நிற்காது ஓடியது. 6.00 மணி அளவில் விமானத்தில் ஏற ஆணை வந்தவுடன் ஏ.-3