பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 5.6.85 423 நப் ஊர்க்காரர்; திருநெல்வேலி. நடராஜ ஐயர், நல்ல சைவ உணவு விடுதியினை நடத்துகிறார். நான் இட்டலி 4 சாப்பிட்டேன். 15.50 டாலர்: அமொரிக்க டாலர் 2.25 க்குநம் ரூபாய் சுமார் 28 ரூபாய். ஒரு இட்டலி 6 ரூபாய் வரி 1 ரூபாய் ஆக ஏழு ரூபாய் ஆகிறது. தயிர்சாதம் 30 ரூபாய்: மசால் தோசை 30 ரூபாய். இப்படியே உணவு பொருள் களின் விலை அதிகம். அவர் நல்ல தமிழர். அங்கு பணியாற்றுபவரும் தமிழர். அவர் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றவர். இங்கே வந்து பல ஆண்டுகளாக நல்ல வியாபாரம் செய்து முன்னுக்கு வந்துள்ளார். நம்நாட்டு இன்றைய அரசியலைப் பற்றியும் நன்கு அலசிப் பேசுகிறார். அவரிடம் விடைபெற்றுப் புறப்பட்டேன். - - ஹாங்காங் ஆகிய இந்த சிறு பகுதி ஆங்கிலேயர் வசம் உள்ளது. ஆனால் சீனா நாட்டைச் சேர்ந்தது. 100க்கு 98 பேர் சீனர்களே வாழ்கின்றனர். மொழி ஆங்கிலமும் சீனமும், மக்கள் நன்கு பழகுகின்றனர். பல வியாபாரம் சீனர்களுடையதே. வடஇந்தியர் சிலரும் கடைகள் வைத் துள்ளனர். இது இந்தியாவைப் போன்ற ஆங்கிலேயர்தம் நேரடி ஆட்சியில் இருந்தது. இப்போதும் அப்படித்தான். 'காலணி என்ற பெயரில் உள்ளது. இதன் தனித்தன்மையால் இந்தக் கோடியில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஒங்க. அன்று வழி செய்தது. ஒப்பந்தப்படி 1997ல் இது சீனர்கள் வசம் ஒப்படைக்கப் படுமாம். தற்போது இங்கிலாந்து கவர்னர் ஒருவரே . ஒரு சில அமைச்சர்கள் துணை கொண்டு - ஆட்சி நடத்தி வருகின்றனர். ஆட்சிமுறை ஒழுங்காக உள்ளது என் கின்றனர். எங்கும் காவல்துறையினர் ஆண்களும் - பெண் களும் - பாதுகாவல் புரிகின்றனர். சாலைகளில் செல் வோரை ஆற்றுப்படுத்துகின்றனர். பலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை; சீனமொழியே. இங்கே பள்ளிகளில் ஆங்கில மும் சீனமும் கற்றுத் தரப் பெறுகின்றன. இங்கே தனிப் பல்கலைக்கழகமும் உண்டு. இது ஒரு தனித் தீவாயினும் அடுத்த நிலத்தின் ஒரு பகுதியும் சேர்ந்தே இது தனிநாடாக (காலனி) உள்ளது.