பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424” ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் இடையில் சுமார் 7கல் கடலுக்குள் இரெயில் பாதையும் சாலையும் அமைத்துள்ளனர். நாற்புறமும் மலைகள் உள்ளன. இயற்கை நன்கு இப் பகுதியினை அழகு படுத்து கிறது.கடலில் படகு விடும் விளையாட்டுப் பொழுதுபோக்கு மிக அதிகம் என்றனர். பிலிப்பைன் நாட்டுமக்களும் இங்கே பலர் வாழ்கின்றனர். சீனா நாட்டின் பகுதியாயினும் நம் நாட்டின் புதுச்சேரி போன்று, இப்பகுதியின் பண்பும் பிறவும் தனித்த முறையில் நன்கு போற்றப்பெறுகின்றன. 1997 க்குப் பிறகு என்னாகும் என்பதை யாரும் சொல்ல முடியாது. திரு. குமரப்பன் அவர்கள் நான் நாளை இங்கே என்னென்ன காணவேண்டும் என்பது பற்றி விளக்கிச் சொல்லி அங்கே செல்லும் வழிகளைப் பற்றியும் ஓரளவு விளக்கினர். சிறிது தூரம் அழைத்துச் சென்று அந்த இடங் களையும் காட்டினர். முழுத் தகவல்களையும் விசாரித்து நாளை காலை 7 மணிக்குள் தொலைபேசியில் பேசுவதாகக் கூறினர். நானும் அவர் விட்டுச் சென்றபின் ஒரு சில கடை களுள் நுழைந்து கண்டேன். பிறகு அறைக்கு வந்தேன். வெளியில் வெப்பமாக இருந்த போதிலும் உள்ளே குளிர் சாதனம் இருந்த படியால் அதிகக் குளிராயிருந்தது. நான் அதை நிறுத்தச் சொன்னேன். - மாலையும் இரவும் தெருப்பக்கம்.உள்ள தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்தேன். மக்கள் நம்நாட்டு மவுண்டுரோடு' சைனாபஜார் போன்ற இடங்களில் செல்வது போன்று சாரி சாரியாகச் செல்லுகின்றனர். அலுவலகம் விட்டபின் 5-30க்குப் பலர் (ஆணும் பெண்ணும்) அவலுலகங்களிலிருந்து வரிசை வரிசையாகச் செல்கின்றனர். இது பெரிய கடைத் தெருப் பகுதியானதலின், மக்கள் - பல வெளிநாட்டு மக்கள் பலர் கடைகளில் சாமான்கள் வாங்கச் சூழ்ந்து நின்றனர். நான் எல்லா ஊர்களிலும் விமானநிலையங்களிலும் வரியற்ற கடைகளைக் (Tax free Shops) கண்டுள்ளேன் (லண்டன். பாரிஸ், நியூயார்க், சிகாகோ, ஜப்பான்). எனினும் இங்குள்ள