பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 5.6.85 425 கூட்டம் எங்கும் இல்லை. விலைகளும் மிகக் கொள்ளை மலிவுதான். எனவே பலர் கூடியிருப்பதில் வியப்பில்லை. ஜப்பான் நாட்டு மக்கள் பலர் ஜப்பானில் உண்டாகும் பொருள்களையே இங்கே வந்து வாங்கிச் செல்வதாகக் சொல்லுகிறார்கள். பலர் நடுத்தர, ஏழ்மை நிலையில் உள்ளனர். தெருக்கள் நெருக்கமானவை. பல மாடிக் கட்டடங்கள் மிக அதிகம். பல பழ்ைய கட்டங்களும் (100 ஆண்டுகளுக்கும் மேல்) ஆங்காங்கே இருந்தன. நெருக்கடி யான ஒரு பகுதி) கடைகள் வரிசைவரிசையாக உள்ளறைகள் அமைப்பில் பல இருந்தன. தெரு (Street shops) நோக்கிய கடைகள் மிகுதி. தெருவில் நடமாடும். நிற்கும் கடைகள் கிடையா நடைபாதைகளும் மிகச் சிறியவை. மக்கள் மகிழ்ச்சியோடே காண்கின்றனர். 9 மணிக்குக் குமரப்பன் தொலைபேசியில் பேசி நாளை செல்ல வேண்டிய வழி முதலியன சொல்லி 4 மணிக்கு அவர் அலுலலகம் வரச் சொன்னார். பின் சிறிது நேரத்தில் காலையிலேயே பெட்டியுடன் வீட்டிற்கு வந்து தங்கி எல்லா வற்றையும் கண்டு மறுநாள் புறப்படலாம் என்றார். நான் நாளை காலை எண்ணி முடிவு செய்யலாம் என்றேன். பிறகு உறங்கச் சென்றேன்.