பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மற்றவர்களுடன் நானும் விமானத்தில் ஏறினேன்; அதற்கு முன்னும் பின்னும் வேறு விமானங்கள் பாரிசுக்கு இருந்தமை யின் இதில் கூட்டம் அதிகம் இல்லை. விமானத்துக்குச் செல்லும்போது சிறு தூறல் இருந்தது. உட்கார்ந்த சில நிமிடங்களில் விமானம் கிளம்பிற்று. ஒரு மணி நேரமே பாரிசுக்குச் செல்ல; எனினும் இடையில் மேகக் கூட்டம் கடுமையாக நடைபோட்டது. விமானம் உயர்ந்தது. மேகங்கள் கீழே தங்கின. மேகத்தை வெற்றி கொண்ட காரணத்தால் விமான ஒட்டியை மேகநாதன் (இந்திர ஜித்து) என அழைக்கலாமோ என நின்னத்தேன். (பாவம் அவனுக்குத் தமிழும் தெரியாது; இராமாயணமும் தெரியாது) மிக உயரத்தில் விமானம் பறந்தது. முறையாக உண்ணச் சில வந்தன. நான் காப்பியை மட்டும் குடித்து, பிறவற் றைத் தொடவில்லை. விமானம் 7.30க்குப் பாரிஸ் விமான நிலையத்தை அடைந்தது. அது இறங்கிய இடம் வெறும் காடாக இருந்தது. ஒரு வேளை வழியில் எங்காவது இறங் கிற்றோ என நினைத்தேன். தூரத்தே வட்டமான உயரிய ஒரே கட்ட்டம் தெரிந்தது. நிலையமும் பெரியதாகவே இருந் தது. அனைவரும் இறங்கவே. நானும் இறங்கினேன். பெரிய கட்டடம் நோக்கி அனைவருட்ன் சென்றேன். இன்னும் கதிரவன் ஒளிவீசிக் கொண்டிருந்தான். சிறிது தூரம் நடந் ததும் வழிநெடு மின்அசைப் படிகளும் வழிகளும் இருந்தம்ை யின் நடக்கத் தேவை இல்லை. உள்ளே செல்லச் செல்ல நிலையத்தின் சிறப்பு விளங்கிற்று. மிகப் பெரிய கட்டடம்வட்டமானது - பல சுற்றும் மாடியும் உள்ளது. சாமான்கள் எடுக்கும் இடத்திற்குச் சென்றேன். சிறிது நேரமாயிற்று. என்னுடன் தம் நான்கு பிள்ளைகளுடன் வந்த அன்னையார் எனக்கு வழிகாட்டி உதவி செய்தனர். அக் குழந்தைகள் என்னுடன் நன்கு பழகின. ஆங்கிலம் பேசின. விமானத் தில் அவர்களுக்குக் கொடுத்த சாக்லெட்டை எனக்கு தந்து எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தின. என் பெட்டி யினை எடுத்து உதவி, உடன் வந்து, பிரான்சு பிராங்கு வாங்க உதவி, வாடகை மோட்டார் ஏற்பாடு செய்தே அவர் கள் புறப்பட்டனர். - - -