பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் 6-6-85 காலையில் சற்று விடியலிலேயே எழுந்து எண் பணிகள் அனைத்தையும் முடித்து, பெட்டிகளில் சாமான்களை மாற்றி அடுக்கி, காலையிலேயே அவர் வீட்டிற்குச் செல்ல முடிவுசெய்து, ஏற்பாடுகளைச் செய்து முடித்தேன். பின் விடுதிக்குத் தர வேண்டியதைக் கணக்கிட்டுக் கொடுத்தேன். இந்நாட்டு 391 டாலர் தந்தேன். (சுமார் 55 அமெரிக்க ட்ாலருக்கும் அதிகம்) இது வரையில் நான் கொடுத்த விடுதி கட்டணத்தில் இதுவே அதிகம் (அடுத்தபடி ஜினிவாவில் நாற்பது டாலர்) கணக்கு முடித்து பெட்டிகளுடன் வாடகை மோட்டாரில் புறப்பட்டேன். நான் இருந்த இடம் சீனப் பெரு நிலைத்தை ஒட்டியது. அன்பர் வாழ்ந்த இடமோ ஆங்காங் தீவு. இந்த இரண்டு இடங்களும் மற்றொரு பகுதி யும் ச்ேர்ந்தே இன்று ஆங்கில ஆதிக்கத்தில் உள்ளன. இவை யன்றி எத்தனையோ சிறு தீவுகளும் உள்ளன அனைத்தும் நான் முன்னரே கூறியபடி 1997ல் சீனா நாட்டின் முழு இணைப்பாக அமையும். இங்கே ஆங்கில ஆதிக்கம் இருப்பதால், அதன் ஆட்சிப் பொறுப்பை கவர்னரே (Governor) கவனிக்கிறார். அவர் மாளிகை தீவின் நடுவில் நெருக்கடியான இடத்தில் உள்ளது. தக்க துணையாளர்களுடன் அவர் ஆட்சி நடைபெறுகிறது. எனினும் பெரும்பாலாகச் சீனர் மொழியே வழக்கத்தில் உள்ளது. எங்கும் சீனப் பெயர்ப் பலகைகளும் இணைந்த ஆங்கிலப்பெயர்ப் பலகைகளும் உள்ளன. டோக்கியோவைப் போன்று வெறும் நாட்டு மொழி மட்டும் இல்லை. ஒரு