பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்காங் இ.6.85. 427 வேளை 1997 க்குப் பிறகு மாறலாம். சீனாவிலும் அம் மொழியே யாண்டும் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பழங் கட்டிடங்கள் . இன்று புதிதாகத் தோன்றிய வானளாவிய 40, 50, 60 மாடிக் கட்டடங்கள் எங்கும் உள்ளன. எப் பக்கம் நோக்கிலும் மலை . மறுபக்கம் கடல். இயற்கை இவர்களுக்கெல்லாம் எல்லா நலங்களையும் வாரி வழங்கி, நம் நாட்டைத்தான் வறிதாக்கி விட்டது. நான் சென்ற வாடகை வண்டி இடையில் உள்ள கடலைக் கடக்கவேண்டும். அதற்கென ஆழ்கடல் அடியில் பாதை இட்டுள்ளனர். பாதாள இரெயிலும் உடன் ஒடுகிறது. எனவே மேலே அலைமோத - கீழே அமைதியான பாதையில் நான் சென்று தீவை அடைந்தேன். கட்டடங் கள் பெரும்பாலும் குன்றுகளின் மேலேயே கட்டப் பெற்றுள்ளன. பலவிடங்களில் கடந்து செல்ல கழிக் கப்பல்கள் பஸ்கள் - பாதாள இரெயில் - மேல் செல்லும் ரெயில் என்பவற்றோடு, நம் நாட்டுப் பழங்காலத்தைப் போன்று சாலையில் பாதையிட்ட டிராம் வண்டிகள் உள்ளன. நான் முன்னரே சுட்டியபடி, இங்கே நடுத்தர மக்களும் ஏழைகளும் அதிகமாக உள்ளமையில் இவற்றை நம்பியே இவர்கள் வாழ்வு நடைபெறுகின்றது. ஏழ்மை இருப் பினும் நம் நாட்டினைப் போல் வீட்டு வேலைகள் செய்ய ஆள் கிடைக்காது. கிடைப்பினும் இந் நாட்டு பிராங் 1500 அல்லது 2000 (சுமார் ரூ. 3000/-க்கு மேல்) சம்பளம் தரவேண்டும். எனவே பிற நாடுகளைப் போன்று இங்குள்ள வரும் தத்தம் பணிகளைத் தாமே செய்கின்றனர். - இந் நாட்டிலும் (ஆங்காங்) அனைத்தும் தனியார் உடைமையே. (அஞ்சலகம் தவிர) எனவே பல தொழில்கள் நன்கு வளர்ந்துள்ளன என்கின்றனர். பிற நாட்டார் முதலீடும் உண்டு. இங்கே என்றும் எங்கும் தொழிற் சங்கம் கிடையாது; எனவே வேலை நிறுத்தம் என்ற சொல்லுக்குப் பொருளே தெரி யாது. முதலாளி, தொழிலாளி நன்றாக இருந்தாலே தன் வளம் பெருகும்