பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் என எண்ணி அவர்களை வாழவைக்கிறான். முதலாளிக்கு நல்ல லாபம் வந்தால்தான் தம் வாழ்வும் தொடர்ந்து உயரும் எனத் தொழிலாளி நினைக்கிறான். என்ன கனவு காண்கிறேன் என்கிறீர்களா? தமிழ் நாட்டில் உள்ளவருக்கு அப்படித்தான் தோன்றும். ஆனால் இங்கேவந்து பார்த்துத் துணியுங்கள். இந்த நாட்டில் (மூன்று பகுதிகளிலும்) மொத்தம் 50 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் பிற நாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யும் தொகையின் மதிப்போ, பரந்த பாரதம் முற்றும், ஏற்றுமதி செல்வதைவிட மூன்று மடங்கு அதிகம் என்கின் றனர். பாரத நாடு அதிலும் தமிழ்நாடு - தொழில்துறையில் எங்கே பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருப்பதாகத்தானே அங்கே அனைவரும் பேசிக்கொள்ளுகின்றனர். இங்கே முக்கியத் தொழில்கள் நுண் அணு (Electronic) பற்றியும் ஆடையற்றியுமேயாகும். அவற்றிற்கு மூலப்பொருள்கள் வெளியிலிருந்துதான் வருகின்றன. எனினும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சலியாது. உழைக்கும் இம் மக்கள் நம் பாரத மக்களைக் காட்டிலும் பலவகைகளில் உயர்ந்துள்ளார். அவர்கள் ஆக்க நெறிகளிலும் அரசாங்கம் போட்டியிடாமல், அவர்கள் தொழில் வளர உதவுகிறது. உணவுப் பொருள்கள் மட்டும் வெளிநாட்டிலிருந்து வருகின்றமையின் அவற்றின் விலை அதிகம். இன்று பகல் ஒரு மலை உச்சி ஒட்டலில் 2ரொட்டித் துண்டுக்கு 8 டாலர் (25 ரூபாய்) தந்தேன். இங்கே பால் விலை லிட்டர் 10 ரூபாயாயாகிறது. - ஊர் அமைப்பு செம்மையாயினும் ஒருசில பெருந்தெருக் கள் தவிர்த்து மற்றவை நெருக்கமாக உள்ளன. மலைகளின் மேல் வளைந்து செல்லுவதால் அகலமில்லை. முன்னமே குறித்தபடி தெருப் பெயர்களில் ஆங்கில நாட்டு ஊர், புலவர் பெயர்கள் முதலியன இடம் பெறுகின்றன. இந் நாட்டு நாணயமும் இராணி உருவம் அமைந்த ஒன்றே. இந் நாட்டில் ஜூலை, ஆகஸ்டு மழைக்காலமாம். எனினும்