பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் 7-6-85 433 காலைப் பொழுது இனியது: நாற்புறமும் நோக்கினேன். கடல், மலை, இயற்கை எழில் ஒருபுறம். மனிதன் கைவண்ணத் திறனால் எழுந்த கோபுரக் கட்டடங்கள் ஒரு புறம் - அசைந்தாடும் கப்பல்கள்: பொதுவாக அதிக கார் ஓட்டம் இல்லை; எனினும் இன்று காலையும் வானத்தில் 'காரோ'ட்டம் இருந்தது. மழை இல்லை.நான் தங்கி இருந்த வீட்டில் எதிரிலேயே ஒரு ஆங்கிலப் பள்ளி இருந்தது. கீழ் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை (+2) பாடம் உண்டு. அவ்வகுப்புகளுக்கு பாரம் (Form) என்ற பெயரே. ஐந்தாம் வகுப்புக்கு மேல் அமைந்தது. தற்போது தேர்வுக் காலம். சில பிள்ளைகள் வெளியிலிருந்து படித்துக் கொண். டிருந்தனர். பெரி யமண்டபத்தில் சில பிள்ளைகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். கீழ் வகுப்புப் பிள்ளைகள் வண்ணப் படங்கள் தீட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிட மெல்லாம் பேசினேன். கல்வியில் விருப்பமுடையவர்களாக இருந்தனர். இளம் பிள்ளைகள் நல்ல படங்கள் எழுதினாலும் ஆய்வு, கட்டுரை முதலியன எழுதினாலும் அவற்றைப்'பள்ளி விளம்பரப் பலகையில் இட்டுச் சிறப்புச் செய்கின்றனர். பிள்ளைகளுக்குச் சம்பளம் மிக அதிகம். ஆங்கில நாட்டு மக்களாலேயே நடத்தப் பெறுவதால்,மதிப்பு அதிகம் என்ற னர் சில பெற்றோர். தீவுப் பள்ளி (Island school) என்றே இதற்குப் பெயர். வளர்ந்த பிள்ளைகள் புகைபிடிப்பார்கள் போலும். தேர்வு மண்டப வாயிலில் புகை கூடாது' என்ற பலகை இருந்தது. வகுப்பறைகள் விசாலமாகவும் தூய்மை யாகவும் இருந்தன. ஒரு மாணவனுக்கு ஒரு இடம் என இருந் தது. சுமார் 40 மாணவர் வரை வகுப்பில் இருப்பார்கள் போலும். பள்ளியைப் பற்றியும் கோடையில் அவர்கள் நடத்தும் வகுப்புகள் பற்றியும் உள்ள குறிப்புகளை அலுவல கத்தில் தந்தனர். பின் விட்டிற்கு வந்து உணவு கொண்டு 12.15க்குப் புறப் பட நினைத்தேன். வாடகை வண்டி அனுப்புமாறு தொலை பேசியில் கேட்டால் இல்லை என்று கூறிவிட்டனர். வெளி ஏ.-28 - - - . .