பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் 7.6.85 435 திரு. வடிவேலு மூவரும் எனக்காக வந்திருந்தும் ஏனோ என் கண்ணில் படவில்லை. வெளியே வந்து தொலை பேசியில் பேச நினைக்கும் போதுதான், நான் இந்நாட்டு நாணய மாற்றுச் செய்யாதது நினைவுக்கு வந்தது. அதற்காக மறுபடியும் உள்ளே சென்றேன். அப்போது தான் மூவரும் என்னைக் கண்டனர். விரைந்து வந்தனர்மகிழ்ந்தனர். காரில் தண்டாயுதம் வீடு சென்றோம். செட்டியார் அவர்களும் உடன் தம் காரில் வந்தனர். வீட்டில் தண்டாயுதத்தின் மனைவியார் மக்கள் இவர்களைக் கண்டு மகிழ்ந்தேன். டாக்டர் வேலாயுதம் அவர்களும் (செட்டியார் மகன்) வந்தார்கள். அனைவரும் நான்ள மறுநாளில் என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றிப் பேசினர். இரு நாட்களுக்கும் திட்டமான ஒரு செயல் முறை .தீட்டினர். நான் எழுதிய வழுவிலா மணிவாசகர் இங்கே நானகு ஆண்டுகளாகப் பள்ளி மாணவருக்குப் பாடமாக வைக்கப் பெற்றுள்ளது. . எனவே நாளை அல்லது மறுநாள் அது பற்றிப் பள்ளி ஆசிரியர் - மாணவர் கூட்டத்தில் பேச வேண்டும் என்றனர். திரு. செட்டியார் அவர்கள் 40கல் தொலைவில் உள்ள சிரம்பானில் இருக்கிறார். சென்னையில் உள்ள மருகர் திரு. வடிவேலு அவர்கள் கட்டாயம் சிரம்பான் சென்று வர வேண்டும் என்று சொன்னதோடு, அவர்களுக்கும் கடிதங்கள் எழுதியிருந்தார். எனவே ஞாயிறு காலை அவர்களுடன் சிரம்பான் சென்று, 10 மணி அளவில் கூட்டத்தில் பேசிவிட்டு, அவர்கள் வீட்டில் உணவு கொண்டு, பிற்பகல் திரும்பலாம் என முடிவு செய்தனர். நான் 1948ல் இங்கே வந்த பணி பற்றியும் அதன் வழியே தமிழ் இங்கே பல்கலைக்கழகத்தே முக்கிய இடம்பெற்றிருப்பதையும் நினை வூட்டினர். எனக்கும் நினைவு வந்தது. மலேயா பல்கலைக் கழகம் தொடங்கும் போது, இந்திய மொழித்துறை இருக்க வேண்டும் என முடிவு செய்யப் பெற்றது. எந்த மொழிக்கு முதலிடம் தருவது என்ற வினா எழ, ஒரு பெரியவர்