பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பல்கலைக்கழகம் சென்று வந்தபோது கண்ட சாலைகள் அமைப்பு அமெரிக்க நாட்டை நினைவூட்டியது. மிகவும் தூய்மையாகவும், கோடிட்டும் வாகனங்கள் விரைந்து செல்லும்வகையில் பல குறையீடுகள் இட்டும் அமைந்திருந்த நிலை கண்டேன்.. ஊர் அழகியது. முன்னரே நான் இவ்வூர்ப் பெயரே அழகைக் குறிக்கும் என்று என் தமிழன் கண்ட மலேயா'வில் குறித்துள்ளேன். கோலம் ஆலும் ஊர் என்று பிரித்து அழகு நடமாடும் ஊர் என்று நான் பொருள் கொண்டேன். மலாய் மொழியில் கோலா" என்றால் அதற்குத் தமிழில் கூடல்' என்று பொருள். இரு ஆறுகள் கூடுவதால் இப்பெயர் பெற்றதென்று அன்றே இங்குள்ளவர் கூறினர். எப்படியாயினும் அழகு கூடியுள்ள ஊர்தானே என அன்று விளக்கினேன். இன்றும் அந்த அழகு குறையவில்லை. மனிதனின் கைவண்ணத்தால் பலப்பல கட்டடங்கள் ஓங்கியுள்ளன. வெற்றிடமாக இருந்த மலை யில் பல்கலைக்கழகச் சம்பந்தமான பல கட்டடங்கள் எழும்பி உள்ளன. ஊரும் விரிவடைந்திருந்தது. இந்த நாட்டு மலேசிய மக்கள் அன்று கல்லா நிலையில் இருந்த தன்மையினையும் இன்று ஆளும் தலைவர் முதல் அனைத்தில் லும் அவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளதையும் அறிந்தேன். சீனர்களும் தமிழர்களும் பெரும்பாலும் முன் இருந்ததைவிட்க் குறைந்தே இருந்தனர். அன்று சிங்கப்பூர் இத்துடன் இணைந்திருந்தது. இன்று அது தனியாட்சி பெற்ற தீவாக அமைந்துவிட்டது. அங்கே சீனர் 100க்கு 80 பேருக்கு அதிகமாக இருப்பார்கள் என்கின்றனர். ஆங்காங் போல அதுவும் முற்றும் சீன நாடாக ஆயினும் ஆகலாம் போலும். இவற்றை எல்லாம் எண்ணி இடையில் சற்றே ஒய்வு கொண்டேன். மாலை ஆறு மணிக்கு அருள்நெறித் திருக்கூட்டத்தில் ஒரு நிகழ்ச்சி - சமயச்சொற்பொழிவு. 4மணி அளவில் இங்கே சிறக்க நடைபெறும் தமிழ் நாளிதழான 'தமிழ்நேசன்' பத்திரிகையின் சார்வாளர் என்ன்னக் காணவந்தார். என் செயல்கள் பற்றியும் பயணம்