பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர் 8-6-35 439 பற்றியும், நூல்கள் பற்றியும் பிற தகவல்களையும் கேட்டறிந் தார். ஞாயிறு மலரில் சிறுகட்டுரை வெளியிடப் போவதாக வும் கூறினார். தமிழ்நேசன்" நான் முன் வந்தபோதே (1948) சிறப்பாக நடைபெற்ற இதழ். என்னை இந் நாட்டிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது. இப்போது அதன் உரிமை வேறுகைக்கு மாறினும் தொடர்ந்து இங்குள்ள தமிழ் மக்களுக்கு நல்ல தொண்டு செய்து வருகின்றது. (சிங்கப்பூர் "தமிழ்.முரசு'ம் நடைபெறுகின்றதாயினும் திரு. சாரங்கபாணி அவர்களுக்குப் பிறகு அவ்வளவு சிறப்பாக நடைபெறவில்லை என்று கூறினர்). என்னைக் காண வந்தவர் தமிழ்நாட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழ் பயின்றவர் (புலவர்). நல்ல தமிழ் உள்ளம் வாய்ந்தவர். முருகையன் என்ற அன்பர். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விடை பெற்றுச் சென்றார். பிறகு திரு. தண்டாயுதமும் நானும் அருள் நெறித்திருக் கூட்டம் நடைபெறும் மண்டபம் சென்றோம். வழிநெடுகக் கோலாலம்பூர் புதுவகையில் பூத்துக் குலுங்கும் இயற்கையும் மக்கள் கை வண்ணத்திறனும் சேர்ந்த காட்சிகளைக் கண்டு கொண்டே சென்றேன். கூட்டம் நடைபெறுமிடம் சொந்த மாகவே வாங்கிக் கட்டப்பெற்றதாம். தமிழ்நாட்டில் பல சங்கங்கள் ஒண்ட இடமின்றி ஒதுங்கி, ஒடுங்கி வாழும் நிலை யில் இங்குள்ள மக்களின் ஆக்கப்பணி அறிந்து மகிழ்ந்தேன். இதற்கு அடிகோலி ஆக்கப்பணிபுரிந்தவர், முன் பயணத்தில் இங்கே என்னை வரவேற்று உடனிருந்து எல்லா உதவிகளை யும் செய்து உதவிய திரு. கா. இராமநாதன் செட்டியார் அவர்கள். அவர்தம் புகைப்படம் மண்டபத்தை அலங்கரித் திருந்தது. நடராசர் திருவுருவம் நடுவில் வைக்கப் பெற்றி ருந்தது. கூட்டத் தலைவரும் பிறரும் கூடி இருந்தனர். அனைவரும் சிறந்த தமிழ்ப்பற்றும் சமய உணர்வும் உடையவர்களாக இருந்தனர். பெண்டிரும் பத்துப் பன்னிரண்டுபேர் வந்திருந்தனர். மொத்தம் எண்பது பேர் இருக்கலாம். ஆயினும் அனைவரும் உணர்வுடைய நிலையில் உள்ளமை அறிந்தேன். பலரும் நன்கு கற்றவராகவும்