பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோலாலம்பூர்/சிங்கப்பூர் 9.6.85 இன்று காலை சற்று மெல்லவே 5 மணி அளவில் எழுந்து 7மணிக்குள் காலக்கடன்களை முடித்துக்கொண்டேன். சிற்றுண்டி கொண்டேன். 10மணிக்கு, சிரம்பனில் வழுவிலா மணிவாசகர் பயிலும் பிள்ளைகளுக்கும் பிற பொதுமக்களுக் கும் என ஒரு கூட்டம் தண்டாயுதபாணி கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். இங்கே மிகப் பழங்காலத்தில் வந்த செட்டிநாட்டு நகரத்தார் பெருமக்கள் ஊர்தொறும் தண்டாயுதபாணியாகிய பழநியாண்டவர் கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். அக்காலத்திலெல்லாம் அவர்கள் பெண்களுடன் வெளிநாடு - கடல் கடந்து செல்லுவதில்லை. நல்ல தமிழ் மரபினராதலின் முந்நீர் வழக்கம் மகடு வோடு இல்லை' என்ற தொல்காப்பிய நெறியைப் பின் பற்றினார் போலும். (இன்று முந்நீர் இன்றி - வான் வழி வழக்கம் வந்து விட்டமையின் மகளிரையும் உடன் அழைத்துச்செல்லுகின்றனர் போலும்). அவர்கள் தனியே வந்து இங்கே வாணிபம் புரிந்தமையின், தம்மைப்போன்றே ஆண்டவனையும் தனியாக அமைத்து - பழநியாண்டியாக வழிபட்டார்கள் என்றனர். மலேயா நாடு முழுவதும் உள்ள ஊர்களில் அவர்கள் வாழ்ந்த காரணத்தால், எல்லா ஊர் களிலும் பழநியாண்டி-தண்டாயுதபாணி கோயில் இருக்கும். வேறு தெய்வங்களுக்கும் சில இடங்களில் கோயில் கட்டி யுள்ளனர். இந் நாட்டில் சைவ நெறி வாழ்கின்றது என்றால் அந்தப் பெருமை இந் நகரத்தார் மரபினையே சேரும். எனவே இன்று சிரம்பான் நகரில் நான் தண்டாயுதபாணியின்