பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் திருக்கோயில் முன் நின்று அவர்களை நினைத்தேன். அவர் மரபினராய் அறம் காக்கும் திரு. இலக்குமணன் செட்டியார் இதோ இன்று அருகில் இருக்கிறார். இவரே இக் கோயிலின் முழுப் பொறுப்பையும் கவனிக்கிறார். சிலவிடங்களில் விழாக்களுக்கு வருபவர்களுக்கு இடையறாது உணவளிக்க, அட்டிற்சாலை அமைத்து, ஆள் உயர அண்டாக்களில் (பெரும்பாத்திரம்) குழம்பு, இரசம் அமைத்து, குழாய் வழியாகத் திறந்து பெற்று, மக்களுக்குச் சோறு ஊட்டி வந்த மரபினை நான் முன்பு இங்கே வந்தபோது (1948) கண்டிருக் கிறேன். அத்துணைப் பெரும் அளவில் இன்றேனும் இன்றும் அவர்கள் அறம் வழுவற நடந்து கொண்டுதான் இருக்கிறது. நான் முன் வந்தபோது சிங்கப்பூரும் மலேயாவும் இணைந்து ஆங்கில ஆதிக்கத்தில் விடுபடு நிலையில், இருந்தன. இந்நாட்டு மலாய் மக்கள் கல்வி அறிவற்ற நிலையில் எங்கோ ஒருசிலர்தாம் பதவிகளில் இருந்தனர். (இவற்றையெல்லாம் என் தமிழன் கண்ட மலேயா என்ற நூலில் குறித்துள்ளேன்). ஆனால் உரிமைபெற்றபின் (ஒன்பது மாநிலத்து மன்னர்களும் பிறரும் முழு உரிமை பெற்று - சிங்கப்பூர் தனியாகப் பிரிய, மலேசியா என்ற பகுதி அமைந்தது) அம்மக்கள் கல்வி கற்று உயர்நிலையில் எல்லா இடங்களிலும் பணி புரிவதோடு, ஆட்சியினையும் ஏற்று நடத்துகின்றனர். அவர்தம் மலாய்மொழிக்கு எழுத்து இன்றேனும் ரோமன் எழுத்தினைக் கொண்டு தம் மொழிச் சொற்களையே எங்கும் பொறித்துள்ளனர். என் பல்கலைக் கழகச் சொற்பொழிவினைப் பற்றிக்கூட மலாய் மொழி யில் (ரோமன் எழுத்து) தான் எழுதி வெளியிட்டுள்ளனர் . எனக்கே புரியவில்லை. அவை அவ்வாறு இருப்பதால் படிக்கமுடியும் என்றாலும் மலாய் மொழியாகையால் பொருள் புரிந்து கொள்ள இயலாது. எங்கும் அவர்கள் மொழி ஆட்சி செய்கிறது. பலவிடங்களில் தமிழும் இடம் பெறுகின்றது மலேயாப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி, ஆரம்பப் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக உள்ளது. ஊர்,