பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கப்பூர் 10-6.85 காலை 5 மணி அளவில் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டேன். நான் முன்னரே குறித்தபடி, இங்கே நேரத்தை மாற்றி வைத்த காரணத்தால், 7மணிக்குத்தான் பொழுது விடிகிறது. காலைக்கடன்களை முடித்துக் கொண்டு 8மணி அளவில் சிற்றுண்டி கொண்டேன். இடை யில் குறிப்பினை எழுதி முடித்தேன். பின், ஊர் செல்வதற் குரிய பயணம் பற்றிக் கேட்டறிந்தேன். நாளை காலை வரச் சொல்லியுள்ளார்கள். உலகம் முழுவதும் சுற்றி வந்த நிலையில், எந்த இடத்திலும் நான் அலுவலகம் சென்ற தில்லை.முன்னரே பதிவு செய்தபடி உரியஇடத்தை எனக்குப் பல விமானக் கூட்டாளர்கள் அங்கங்கே ஒதுக்கி விடுவர். ஆனால் நான் ஹானலூலூவிலிருந்தும் ஆங்காங்கிலிருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியும் 3-4-85லேயே முன்னதாகப் பதிவு செய்தும் நாளைதான் திட்டமாகச் சொல்லுவதாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே நம் நாட்டு விமானப் போக்குவரத்தினைக் கண்டு பிற நாட்டார் நகைக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் எனக்கு உண்டாயிற்று. காலை இங்குள்ள வானொலியைத் திருப்பினர். காலை 6மணி முதல் இரவு 12மணிவரை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பாகும் நிலை இங்கே உண்டு. பள்ளிகளுக்கெனப் பல பகுதிகள் - பாடல்கள் - நாடகங்கள் . உரையாடல்கள் இப்படிப் பலப்பல வகையில் நாடோறும் தமிழ் ஒசை தொடர்ந்து கேட்க ஏற்பாடு செய்துள்ளனர் இந்த ஆட்சி