பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கப்பூர் 10-6-85 451 யாளர். இது தமிழகத்திலும் காணமுடியாத ஒன்றல்லவா! பகல் 1மணிவரை ஒய்வாக இருந்து, இந்த வான் ஒசை வழியே பல நாட்களுக்குமுன் நான் கேட்ட நல்ல பாடல்களையெல் லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். பின் பகல் உணவு கொண் டோம். (திரு. மாணிக்கம் அவர்களும் உடல் நலமில்லை யாதலால் அலுவலகம் செல்லவில்லை) . பிறகு இரண்டு மணிக்குக் கடைகளுக்குச் சென்று பள்ளிக்குத் தேவையான இரண்டுடொரு பொருள்களை வாங்க நினைத்து அன்னை யாருடன் புறப்பட்டேன். பல் கடைகள் - சில நம் தமிழர்களே வைத்துள்ளவை - சென்று பள்ளிக்குத் தேவையான ஒரிரு கருவிகள் வாங்கி னோம். அங்கே தமிழர்தான் பலர். தெருவுதோறும் தமிழர் கூடியுள்ளனர். தமிழ்மட்டும் அறிந்தவர்கள் யாரும் இங்கே யாதொருசிக்கலுமின்றி வாழ முடியும்.பலவிடங்களில் நம் நாட்டு உணவுச் சாலைகளும் உண்டு. வணிகர் பலர் நம் நாட்டைச் சேர்ந்த - வடநாட்டினையும் உட்படத்தான் - நல்லவர்களாக உள்ளனர். எனவே எந்தப் பொருளையும் வாங்குவதில் கடினமில்லை. எனினும் கூட்டம் அதிகமாக உள்ளமையின் விரைவில் செயலாற்ற முடியவில்லை. அனைத்தையும் கண்டு முடித்தபின் நாங்கள், 6மணிக்கு மேல் வீடு திரும்பினோம். பின் இங்குள்ள தண்டாயுதபாணி கோயிலுக்குச் செல்ல நினைத்தோம். அம்மையார் அவர் களுடன் அவர் தம் மற்றொரு உறவினரும் உடன் வந்தனர். இங்கே வாடகை வண்டிக்காரர்கள் நேர்மையாக இருப்ப தில்லை. கார்'களில் நால்வர் செல்லலாம் என வழி இருப்பினும், இருவருக்கு மேல் ஏறினால் ஒருவருக்கு 50 காசு (; வெள்ளி) தனியாகத் தர வேண்டுமாம். கொஞ்சம் சாம்ான்கள் இருந்தாலும் தனியாகக் காசு தர வேண்டும். காசு மிகுதியிருப்பின் அதையும் தரமாட்டார்கள். எங்கும் காணாத இந்தப் புதுமை கண்டு வியந்தேன். கோயில் மிக அழகாக - தூய்மையாக வைக்கப் பெற்றி ருந்தது. அண்மையில்தான் கோயிலைச் செப்பம் செய்து