பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கப்பூர் 11-6-80 心轉, சிங்கப்பூர் நகர்ம் பலவகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. எங்கும் பல மாடிக் கட்டடங்கள்: நல்ல சாலைகள்.தெளிந்த சாலை வழிகாட்டும் முறிைகள். பலவிடங்களில் பூங்காக்கள் . சிறுவர் விளையாடுமிடங்கள். இப்படிப் பல வகையில் மக்கள் வாழ்வு கருதிப் பல அரிய செயல்களை இந்த ஆட்சியாளர் செய்துள்ளார். இது ஒரு தனித்தீவு; சிறியது. நம் சென்னை நகர் எல்லையினும் சிறியது.மக்கள் ஒரு சில இலட்சம் இருக்க லாம். தனி ஆட்சி. அமைச்சரவை உண்டு. நகர்நலம் போற்றப் பெறுகிறது. - என்னுடைய இந்நெடிய உலகப்பயணத்தின் கடைசிக் கட்டமாகிய இந்த மூன்று நாட்களிலும் இறைவன் நிலை கண்டு மகிழும் வாய்ப்பினைப் பெற்றேன். 9-6-85-ல் சிரம்பானில் தண்டாயுதபாணி கோயிலில் இறைவழிபாடும் நேற்று இங்கே தண்டாயுதபாணி கோயிலில் முருகன், சிவன், அம்மை வழிபாடும் பெற நின்ற நிலையில் இன்று சீனிவாசப் பெருமாள், இலக்குமி, சிவன், சக்தி ஆகிய கடவுளரை ஒருசேரக் கண்டு மகிழும் பேறு பெற்றேன். இன்று காலை யில் சாமான்களையெல்லாம் சரிசெய்து கட்டிவைத்தேன். சிற்றுண்டிக்குப்பின் திரு. மாணிக்கம் செட்டியார் அவர்கள் பயணம் உறுதிபெற உரிய அலுவலகம் அழைத்துச் சென்றார். அங்கே என் பயணம் உறுதி செய்யப்பெற்றது. அதுபற்றி எண்ணி மகிழ்ந்தேன். நன்றி கூறினேன். இங்கே நம் நாட்டுக்குப் போக்குவரத்து மிக அதிகமாக