பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 6.4.85 விடியற்காலை முறைப்படி எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வெளிவந்தேன். வானம் இன்னும் இருண் டிருந்தது. 8-30க்குத்தான் சூரியன் தெரிவான். அதிலும் இன்று வானம் இருண்டு மழையாக இருந்த காரணத்தால் மிகக் குளிராகவும் இருட்டாகவும் இருந்தது. மக்கள் நடமாட்டமும் இல்லை. எனக்கு 8 மணிக்குக் காலைச் சிற்றுண்டி தந்தனர் (இதுவும் வாடகையுடன் சேர்ந்ததே). ரொட்டி, வெண்ணெய், ஜாம், காப்பி இவையே முறையான காலை உணவு. அதை உட்கொண்டேன். வெளியே தூரல். எனவே எங்கும் செல்ல முடியவில்லை. நான் திருமதி. காந்திமதி அவர்கள் தந்த முகவரிகளுக்குச் செல்ல நினைத்து ஒவ்வொரு இடமாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஒருவர் அலுவலகம் இல்லையாதலால் பெறவில்லை. மற்றவர் வீட்டு முகவரிக்கே பேசினாலும் யாரும் எடுக்கவில்லை. மற்றொரு எண் சுழற்றினால் எடுத் தனர். ஆயினும் அதே முகவரி, அதே எண் இருந்த போதிலும் நான் கேட்டவர் அங்கே இல்லை என்ற பதிலே வந்தது. மற்றவர்தம் தொலைபேசி எண் இல்லை. அவர்கள் இருக்கும் இடம் பற்றியும் யாரும் தெளிவாகச் சொல்ல வில்லை. ஈஸ்டர் நாள் விடுமுறையானதால் அவர்கள் எங்கேனும் வெளியே சென்றிருக்கக்கூடும் என்றனர். என்ன செய்வது எனத் தெரியாது திகைத்து நின்றேன். ஜினிவா. வில் யாரும் இல்லை என்ற உணர்வோடு வந்தமையின் கவலை,இல்லாதிருந்தேன். இங்கே ஐவர் தமிழர் உளர்.