பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் ஆனால் ஒரே ஒரு கிறித்தவர் இருந்தார்; அவரும் சிலுவை யில் மாண்டார் என்ற ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் வார்த்தைகள் இவருடைய நினைவிற்கு வருகின்றன. 案 米 率 அங்கே பாரிசில் பெரிய நூல் நிலையம் இருக்கிறது. ஆனல் அங்கே கம்பனும் இல்லை: இளங்கோவும் இல்லை; வள்ளுவரும் இல்லை: பாரதியும் இல்லை என்று அங்கலாய்க் கிறார். அந்த உணர்வு-தமிழ்நாட்டில் பிறந்த உணர்வுஅங்கே பாரிசில் வருவதைப் பார்த்து என்போன்றவர்தம் உள்ளத்தை உலுக்குகிறது. 米 # 事 உரோமுக்குச் செல்லுகிறார். போப் ஆண்டவரைப் பார்க்கிறார். இவர் சாதாரண மக்களைப் போன்று "என்னை ஆசீர்வதியுங்கள்' என்று சொல்லாது-வேண்டாது 'இந்த வள்ளியம்மாள் பள்ளியில் பயிலும் பிள்ளைகளை ஆசிர்வதியுங்கள் என்று வேண்டுகிறார். உரோம் நகரிலே தங்கியபோது, அந்நாட்டு மக்கள் யவனர் என்ற பெயருடன் பழைய காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருந்த யவனர் இருக்கை நினைவுக்கு வருகிறது. அங்குள்ள பெரிய மாதா கோயிலைப் பார்க்கும்போது தஞ்சைப் பெரிய கோயில் இவர் நினைவில் வருகிறது. அங்கே செல்லுகின்ற எத்தனை பேருக்கு இத்தகைய நினைவுகள் வரும்? . 来 崇 水 இலண்டன் மாநகரத்திலே மக்கள் காலத்தை வீணாக்காது ஒடி உழைக்கின்றதைக் காண்கிறார். ஆனால் நம் நாட்டில் பலர் 'சும்மா இருப்பதே சுகம் என்று சும்மா” இருப்பதை எண்ணி வருந்துகிருர். அவர்கள் சுறுசுறுப்பும் வேலைகளில் காட்டும் ஊக்கமும் இவரைக் கவர்கின்றன. 米 :}; 米 பிற நாடுகளில் நம் சமயத்தைபற்றி அறிந்துகொள்ளப் பலர் முனைப்போடு இருக்கிறார்கள். ஆனால் நம் சமய