பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருத்துக்கள் சில 463 உண்மைகளை அவர்களுக்கு விளக்கிச் சொல்ல ஆட்களோ நூல்களோ இல்லை என்று வருந்துவதோடு, நம் நாட்டு மடாலயங்கள் இவைபற்றி ஒன்றும் செய்யாததை எண்ணிப் பார்க்கிறார். அப்படியே இந்நூலில் குறித்திருக்கிறார். 。本 岑 米 அந்நாடுகளில் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தேர்வுமுறைகள் ஒழுங்காகவும் செம்மையாகவும் நடைபெறு வதைக் காண்கிறார். நம்நாட்டில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அத்தகைய நல்ல முறைகளில் தேர்வுகள் நடைபெறாத நிலையினை எண்ணி வருந்து கிறார். அப்படியே ஆய்வுப்பட்டங்கள் பெறுவதற்கு அந்த நாடுகளில் பல்கலைக்கழகங்கள் கொண்ட விதிமுறைகளை யும் நடைமுறைகளையும் சுட்டிக் காட்டுகிறார். ஆனால் நம் நாட்டில் அந்த ஆய்வுப்பட்டங்கள் பெறுகிற நிலை இவர் உள்ளத்தைத் தொடுகிறது. 米 岑 岑 இங்கே சம்பளம் நாள் கணக்கில்-மாதக்கணக்கில் வேலை செய்தால் கிடைக்கும். அந்நாடுகளில் மணிக் கணக்கில்-அதுவும் அவர்கள் வேலை செய்யும் அளவிற்கு ஏற்றபடி சம்பளம் கிடைக்கிறது. அதுவும் இந்த ஆசிரியர் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது, . 本 宏 掌 அட்லாண்டிக் மகாசமுத்திரத்தை விமானத்தில் கடக் கிறார். அப்போது கம்பருடைய கடல் தாவு படலம்' இவர் நினைவுக்கு வருகிறது. ஒரு சிறு பாக்ஸ் சலசந்தி'யை அனுமன் கடந்ததை அப்படலத்தில் அவ்வளவு அழகாகப் பாடிய கம்பன், இப்போது இருந்தால் இக் கடல்தாவு நிலையை எப்படி எப்படிப் பாடியிருப்பான் என அங்கலாய்க் கிறார். இந்த நாட்டில் பிறந்ததன் அடிப்படைத் தமிழ் உணர்வு இவரிடம் இருந்த காரணத்தாலேயே அட்லாண்டிக் மாகடலைக் கடக்கும்போது கம்பனது கடல் தாவு படலம்