பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 6-4-85 41 தூய்மையாக உள்ளன. ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியி லிருந்து இறங்கும் இடத்துக்கு நேராக (சுமார் 10 (அ) 12 இடங்களில்) அந்த நிலையத்தின் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்ற தமிழ் இலக்கியபடி வண்டி நின்றது.தெரியும்: சென்றது எப்போது என்ற ஐயம் எழுகின்றது. அத்துணை விரைவு. நான் செல்ல வேண்டிய இடம் 12 நிலையங்கள் தாண்டி உள்ளது. ஒவ்வொரு பெட்டியில் நான்கு ஐந்து வாயில்கள்: அவை நின்றதும் தாமாகத் திறந்தும் முடியும் இயங்குவன. ஒவ்வொரு வாயின் மேலும் அந்த வண்டி புறப்படும் இடமும் சேரும் இடமும் குறித்திருப்பதோடு வரிசையாக ஒவ்வொரு நிலையத்தின் பெயரும் பொறிக்கப்பெற்றிருந்தது. எனவே யாரையும் கேட்காமலே நாம் இறங்கும் இடத்தினைச் சுலப மாகக் கண்டு இறங்க முடியும் இறங்கும் துறைக்கு நேரே பெரிய எழுத்தில் அந்த இடத்தின் பெயரும் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே இடையில் இருந்த நிலையங்கள் ஒவ்வொன்றினையும் எண்ணிக் கொண்டே சென்றேன். வண்டியில் விடுமுறையானதால் அதிகக் கூட்டம் இல்லை: வேலை நாட்களில் கூட்டம் நிரம்பிவழியும் என்றனர். நான் நாளை என்ன செய்யவேண்டும்? இப்படி அறிந்தவர் ஒருவரையும் காணமுடியாத நிலையில் இங்கே ஏன் தங்க, வேண்டும் என்ற நினைவோடு நான் செல்கையில், பக்கத்தில் ஒருவர் நீங்க தமிழரா என்று தமிழில் கேட்டார். நான் வியந்து திரும்பி ஆம்' என்றேன். அவர் இலங்கை யாழ்ப் பாணத்தவர் என்றும், பெயர் சுதா’ என்றும் கூறி, அவர் போன்ற இலங்கை அன்பர் பலர் உள்ளமை குறித்தார். தற்போதைய அந் நாட்டுக் கலவரத்தால் சுமார் எண்ணுாறு (800) பேர் பாரிசில் வந்து தங்கியுள்ளனர் என்றும் சொன்னார். பிறகு என்னைப் பற்றி நன்கு கேட்டு, தாமும் நான் இறங்கும் அதே இடத்தில் இறங்குவதாகவும் உடன் 'வந்து உதவுவதாகக் கூறினர். அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வந்தது. அவருடன் இறங்கினேன். அது ஒரு