பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 r ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் பெரிய சந்திப்பு நிலையம். அனைத்தையும் சுற்றிக்காட்டி, பின் மேல் பக்கத்துக்கு அழைத்து வந்தார். மேலேயும் அது ஒரு பெரிய ரயில் நிலையம். அங்கிருந்து பல ஊர்களுக்கு எப்போதும் ரெயில்கள் புறப்படுகின்றன, அதுதான் பெரிய நிலையம் போலும் மிக நீண்டு பரந்து காணப்பட்டது. அவர் எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டே தாமஸ் குக் அலுவலகம் அழைத்துச் 'சென்றார். நல்ல வேளை அது திறந்திருந்தது. எனினும் நீண்ட கியூ' வரிசை யிருந்தது. நான் என் பணத்தை மாற்றக் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும் என்றார். அவர் தங்கும் அறை பக்கத்தில் தான் உள்ளதெனவும் கூறி, அவர் தொலைபேசி எண் தந்து, என் முகவரியினையும் பெற்றுக்கொண்டு, பணம் மாற்றிய பின், பக்கத்தில் உள்ள தொலைபேசி வழி தேவையாயின் தன்னைக் கூப்பிடச் சொன்னார். அவர் சென்ற பின் சுமார் 1 மணி 15 நிமிடங் கழித்து நான் எனக்குரிய மாற்றுத் தொகை பெற்று வெளி வந்தேன். பின் அவருக்குத் தொல்லை தர வேண்டாம் என்று, திரும்ப மெட்ரோ பகுதிக்கு உள் சென்றேன். அது பெரிய சந்திப்பு ஆதலால் நான் திரும்ப வேண்டிய வண்டியை எளிதில் கண்டுபிடிக்க இயலவில்லை. (இங்கேயும் இரெயில், கார் எல்லாப் போக்குவரத்துமே வலப்பக்க மரபினையே Kept to the right - கொண் டுள்ளன). நான் செல்லும் நெறி பற்றிப் பலரிடம் கேட்டேன். நிறுவனத்தார் பாதைகள் பற்றிப் பல வகை களில் படங்களை அச்சிட்டுள்ளனர். பெரிய படங்கள் ஆங்காங்கே - நிலையத்தில் வழியாய் - பிளாட்பாரத்தில் . இரெயிலில் - ஒட்டப்பெற்றுள்ளன. கையடக்கமாக நாட் குறிப்பில் கொள்ளவும் சிறு படிகள் உள்ளன. எனக்கு உதவ நினைத்த பலர் அத்தகைய படங்களைப் பார்த்தே நான் செல்லவேண்டிய திசை, வண்டி, பிளாட்பாரம் ஆகிய வற்றைச் சுட்டினர். அடிக்கடி செல்பவர்களும் திசை மாறாதிருக்க அத்தகைய படங்களை வாங்கி வைத்துக் கொண்டு தேவையானபோது பார்த்துக் கொள்ளுகின்றனர்: எப்படியோ பலர் உதவியால் நான் திரும்பவேண்டிய