பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ் 6.4-85 - 43 இரெயில் நிற்கும் பிளாட்பாரத்துக்கு வந்து, உரிய இரெயில், ஏறி, செயிண்ட் பிளாசையிட் (St. placide) வந்து சேர்ந்தேன்; வெளி வந்தேன், - மாலை 6 மணி இருக்கும்; சோர்வாய் இருந்தமையால் டீ அல்லது காப்பி அருந்தலாம் என நினைத்தேன். வெளியில் எங்கும் (விடுமுறையானதால்) கடை இல்லையாதலால் ஒரு ஒட்டல் உள் புகுந்தேன். அங்கே பல மது வகைகள் பரிமாறப்பெற்றன. ஆண்களும் பெண்களும் கலந்து அவற்றை குடித்து மகிழ்கின்றனர். ஆண்களும் பெண்களும் பழகும் முறையும், ஒருவரை ஒருவர் காணும்போது - பெரிய வர்கள்கூட முத்தம் அளிக்கும் முறையும் நமக்கு விரசமாகத் தோன்றினும் அவர்களுக்கு அது பழக்கம் போலும் உண்ணும் பருகும் இடத்தும் அப்படியே. நான் ஒரமாக உட்கார்ந்து காப்பி கேட்டேன். சர்வருக்கு வியப்பாக இருந்தது. பிறகு கொண்டு வந்து கொடுத்தான். பால் இல்லை: கரிய காப்பி - சர்க்கரைக்கட்டிகள் 2. அதை அருந்தினேன். காப்பி நல்ல காப்பிதான். ஆனால் பில், 9.20 பிராங் என்று இருந்தது. (ரூபாய் 18/-) இதில்-8 விலை, 1.20 வரி. உடன் தொகையினைக் கொடுத்து வெளி வந்தேன். மழையின்றி வானம் வெளுத்திருந்தமையின் சற்றே சுற்றிப் பார்க்க நினைத்தேன். எனினும் நெடுந் தூரம் சென்றால் வழி தவறுமோ என்ற அச்சமும் ஒரு புறம். எனவே பக்கத்திலே சில சில சாலைகளைக் கடந்து பார்த்து விட்டு விடுதிக்குத் திரும்பினேன். - - - நாளை என்ன செய்வது என யோசித்துக் கொண்டே இருந்தேன். ஞாயிறு ஆனதால் எல்லாக் கடைகளுமேஇன்று திறந்திருக்கும் சில உட்பட-மூடி இருக்கும் என்றனர். நாளை வெய்யில் இருந்தால் வெளியே சில இடங்களுக்குச் செல்லலாமே என நினைத்தேன். ஏர் பிரான்சு (Air France) சென்று என் உரோம் பயணத்தை உறுதி செய்ய வேண்டி யிருந்தது. என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டு, விடுதி முக்ப்பில் உட்கார்ந்து இருந்தபோது, இந்த விடுதியில்