பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மேலைநாடுகளில் பிச்சைக்காரர்களே இல்லை: இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் எங்கும் பிச்சைக்காரர் தொல்லை' எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால் இங்க்ே நான் கண்ட காட்சி அவர்கள் அறியாது கூறிய கூற்றை மறுத்தது. வழி நெடுக இல்லையானாலும் ஆங்காங்கே இரண்டொருவரைக் காணமுடிந்தது. (நேற்று ஜினிவாவிலும் அ ப் படியே) மெட்ரோ செல்லும், உள்வழியில் ஒரு குருடன் துணியை முன் விரித்துப் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். 5 முதல் 50 வரை பல காசுகள் அத்துணியில் இருந்தன. நம் தெருக்களில் கோலம் இட்டோ, கடவுள் உருவம் எழுதியோ பிச்சை எடுப்பது போல இங்கேயும் சிலர் வழி ஓரத்தில் - நடைபாதையில் கோலங்கள் பொம்மைகள் போட்டு, பக்கத்தில். இருந்து பிச்சை எடுப்பதைப் பார்க்க முடிந்தது. அளவில் குறைந்த தாயினும் பிச்சைக்காரர் அடியோடு இல்லையென்று சொல்ல முடியாது. ஆனாலும் தெரு ஓரத்தில் நம் ஊர்களில் காணுவது போன்ற நடைபாதைக் கடைகளோ அவர் களுக்குக் காப்பளிக்க நினைக்கும் மன்றங்களோ அரசோ இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. அது மட்டுமின்றி எங்கும் குடிசைகளோ குடிசைப்பகுதிகளோ (Slums) கிடையாது. எனவே குடிசை மாற்று வாரியமும் இல்லை. நம் நாட்டுக்கு வரும் பிறநாட்டவர் தெருவுதொறும் . இரெயில்பாதை இரு புறங்களிலும் பெருங்கல்விச்சாலை, மருந்தகங்கள் ஓரங்களிலும் நடுத்தெருக்களிலும் உள்ள குடிசைகளைக் காண்கின்றனர். அங்க்ே குடிசைகள் அமைத்து, ஆளும் கட்சியின் தலைவர்களின் பெயர்களையும் சூட்டி, தமக்கு விளக்கு, குழாய் முதலியனவும் அரசாங்கத் தாலே தரப்பெற்று வாழும் பெருமக்களை இங்கு காண முடியவில்லை. அதற்கென ஊர்ப்புறங்களிலும் சென்று கண்டேன். வறியராயினும் எளியவகையில் வரையறுத்த வீடுகளில் வாழ்வார்கள் போலும். - * மெட்ரோவை விட்டு எங்கோ சென்று விட்டேன். மெட்ரோ இரெயிலில் சென்று இறங்கிய நாங்கள் நேரே