பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uffleກໍ່) 7-4-85 - 47 அந்தப் பெருங்கோயிலுக்குள் சென் றோம். மணி பதினொன்று. வழிபாடு முடியும் வேளை, எனினும் பலர் விரைந்து வந்து புகுந்து கொண்டிருந்தனர். உள்ளே மேடையில் ஒளி விளக்கு மிளிர்ந்தது. ஞானாசிரியர் வேதங் கள் ஒதினார். மக்கள் வழிபாடும் முடியும் நிலை; சிறிதுதான் நின்றோம். அப்போது என் இளமைப்பருவத்தில் நான் செங்கற்பட்டிலும் காஞ்சிபுரத்திலும் கிறித்தவர் கோயிலுக் குள் சென்று வழிபாடாற்றிய நிலை யாவும் நினைவுக்கு வந்தன: தம்மை ஒறுத்து உலகுக்கு ஈந்த தலைவனின் சமயத்தில் இன்று என்னென்ன வகையில் இன்னல் புகுந்தன என்பதையும் என் உள்ளம் 'எண்ணிற்று. வெறும் சின்ன மாகச் சிலுவையினை அணிந்து ஏசுவை ஏட்டிலே வைத்து வழிபடும் நிலையினை எண்ணினேன். அப்போதுதான் ஆங்கில அறிஞர் பெர்னாட்சா சொன்ன சொல் என் நினை வுக்கு வந்தது, உலகில் ஒரே கிறித்தவன் தான் இருந்தான்: ' spargio Gayabarujá, Lorrain Lirgi' (There was only one christ- ian who died on the cross) stairports. -glhl Q#5 p.a.iranup இன்று எல்லா சமயங்களுக்கும் பொதுவாக அமையும் நிலை யினை எண்ணினேன். மறுபடியும் திசை திரும்பினேன். நாங்கள் சென்ற சில நிமிடங்களில் வழிபாடு முடிந்து அனைவரும் வரிசை வரிசையாக வெளி வந்தனர். முதியரும் இளையரும் - வறியரும் செல்வரும் பலப்பல வகையினர் வந்து கொண்டேயிருந்தனர். கூட்டம் ஐயாயிரத்துக்கு. (5, 000) மேலும் இருக்கும். எனினும் பலரும் வெளிவரும் போது ஏதேதோ சமயத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒரே ஆர்வாரம் விரைந்து சென்றோர் பலர். மழையாக உள்ளமையின் தளர்ந்து நின்றோர் சிலர். எனினும் யாரும் இயேசுவின் தியாகத்தை யும் ஈஸ்டர் சண்டே என்ற நினைவையும் கொண்டவராக இல்லை. மேலும் பலரும் பகட்டான வண்ண உடைகளை அணிந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் எனக்கு நம் நாட்டுக் கவிஞ்ர் அமரர் பாரதிதாசனின் பாடல்