பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களைக்கூட வாங்க முடியாது என்றனர். என்போன்று வெளிநாட்டிலிருந்து வருவோர் எவ்வாறு வருந்துவர் என நினைத்தேன். நல்லவேளை நான் தங்கியிருந்த விடுதியின் பக்கத்தில் ஒரு சிறு கடை திறந்திருந்தது. அங்கே வாழைப் பழம், ஆப்பிள், பிஸ்கட் முதலியன வாங்கி வந்தேன். அங்கே நம் ஊர் வேர்க்கடலையும் இருந்தது. விலை கிலோ 18 பிராங் (சுமார் 25 ரூபாய்) என்றனர். நான் அதை வாங்க வில்லை. அதனால் உடலுக்கு வேறு ஊறு நேருமோ என அஞ்சினேன். உணவு கொண்டபிறகு மறுபடியும் வெளியே செல்ல முயன்றேன். எனினும் மழைவிடாது தொடர்ந்தது. ஆகவே வெளியே செல்ல இயலவில்லை. விடுதியிலேயே, இருந்து கொண்டு, வந்த பல நாட்டு மக்களுடன் பேசிக் கொண். டிருந்தேன். ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்தும் வடக்கே சுவீடன், நார்வே முதலிய இடங்களிலிருந்தும் வந்தவர் பலர். ஆயினும் பலருக்கு ஆங்கிலமே தெரியவில்லை. பிரஞ்சு, அனைவரும் நன்கு பேசினர். ஓர் ஆப்பிரிக்க மாது தனியாக வந்தார். அவருக்கு ஆங்கிலம் பிரஞ்சு இரண்டும் தெரிய வில்லை. எப்படியேர் தனியாக ஏதோ ஒரு பணியாக வந்த தாகக் குறிப்பாக அறிந்தேன். அவர் தனியாக இப்படி வந்தமையைப் பாராட்டினேன். நான் இத்துணை தூரம் தனியாக வருவது பற்றி அஞ்சியது உண்டு: அன்பர் பலரும் உடன் யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதும் உண்டு. எனினும் இந்த அம்மையாரைக் கண்ட வுடன் நான் வந்தது ஒன்றும் தவறு இல்லைஎன அறிந்தேன். இவ்வாறு பல நாட்டு மகளிர் பணி பொருட்டும் பிற வகை யிலும் .பாரிஸ் முதலிய நகரங்களுக்கு வருகின்றனர் என அறிந்தேன். - - மாலை சற்றே எங்கேனும் சூடான பானம் ஏதேனும் கிடைக்குமா என எங்கும் தேடினேன். எல்லாக் கடைகளும் மூடி இருந்தமையின் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது தான் நினைத்தேன், மெய்கண்டான் வாங்கி வந்த ஏ.-4 - - -