பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் முடியாது. அங்கே பணியாற்றுகின்றவர்களும் மிக அமைதி யாகப் பணிபுரிகின்றனர். உள்ளே மிக எளிமையாக யர்ராலும் செல்ல முடியாது. நானும் ஒரளவுதான் செல்ல முடிந்தது. அங்கிருந்த அமைதி என்னைக் கவர்ந்தது. மருந்து, பிற சிகிச்சைகளைக் காட்டிலும் அமைதியும் சூழ் நிலையும் பல நோய்களை நீக்கும் என்று நம்நாட்டு மருத்துவ அறிஞர் காலஞ்சென்ற குருசாமி முதலியார் அடிக்கடி சொல்லுவார். அப்படியே அவரிடம் வரும் பல நோயாளி களை, அப்போதே திருக்கழுக்குன்றம் முதலிய அமைதியான இடங்களுக்குச் சென்று சில நாள் தங்கி வருமாறு சொல்லு வார். அவர் சொல்லின்படி அப்படிச் சென்றவர்கள் அவர் குறித்த நாள் எல்லைக் கடந்து வந்து, தாம் நோய் நீக்கம் பெற்றமையை அவரிடம் கூறிச் சென்றமையை நானே நேரில் கண்டிருக்கிறேன். இங்கே அந்த அமைதியினை . ஆரவாரப் பெருநகருக்கு இடையில் அமைத்து மருத்துவம் நடத்துவதைக் காண மகிழ்ந்தேன். அதே வேளையில் பேரார்வாரத்துக் கிடையில் அமைந்த சென்னையின் மருத்துவமனைகளை நினைந்தேன். இம்மருத்துவமனையில் பலவகை நோய்களையும் போக்குகிறார்களென்றும் வெளி நாட்டிலிருந்தும் பலர் இங்கே மருத்துவத்துக்காக வருகிறார் - கள் என்றும் அறிந்தேன். என் எகிப்திய நண்பரும் அதே நிலையில் தன் மகளின் மருத்துவத்தின் பொருட்டே இங்கே வந்து தங்கியிருக்கிறார். . - . மருத்துவமனையை விடுத்து வெளிவந்து சுற்றுலாத் துறைக்குச் செல்ல நின்ைத்தோம். நல்ல கதிரொளி அமைந் தமையின் சுற்றுலா சிறப்பாக அமையும் என நினைத்தோம். ஆயினும் சுற்றுலாத்துறையும் விடுமுறையில் உள்ளதாகவும் புதிதாக எங்கும் செல்ல இயலாதெனவும் கூறினர். எனவே முடியிருந்த கடைகளின் கண்ணாடிக் கதவுகள் வழியே பல தெருக்களில், பல பொருள்களின் விலை, தரம் முதலியன கண்டு கொண்டே மறுபடியும் பன்னிரண்டு மணி அளவில் விடுதிக்குத் திரும்பினோம்,