பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரில் 8.4.85 55 40க்கும் பல வகையில் விடுதிகள் உள்ளன. அனைத்தும் அரசாங்க இசைவு பெற்றே நடக்கின்றன. நான் தங்கிய விடுதியில் 100 பிராங்கு வீதம் பெறுகின்றனர். எனினும்: குளிப்பதற்குத் தனியாக 15 பிராங்கு, பிறவற்றிற்குத் தனித் தனி என்று 125 முதல் 150 வர்ை செல்லும். குளியலோ வேறு தேவையோ இல்லாதவர்கள் நூறோடு நிற்கலாம். எல்லா விடுதிகளிலும் காலைச் சிற்றுண்டி (Breakfast) இலவசமாக வழங்குகின்றனர். அதன் தரமும் அவ்வவ்விடுதி யின் மதிப்பினை ஒட்டி உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும். கட்டடங்களும் பலவகையில் உள்ளன. 100 அடுக்குக்கு மேற்பட்ட சில கட்டடங்கள் உள்ளன. பெரும்பாலும் ஐந்து முதல் எட்டு, ஒன்பது அடுக்குகள் கொண்டவை. இரண்டு மூன்று அடுக்குகள் கொண்டவையும் உள்ளன. யாவும் முகப்புப்பொலிவுடன் உள்ளன. சில மாளிகைகளின் கதவுகள் பழைய பெரிய அரண்மனைக் கதவுகளை ஒத் துள்ளன. மாளிகைகளுக்கும் சாலைக்கு மிடையே அகன்ற நடைபாதைகள் உள்ளன. அவற்றில் யாரும் கடை முதலியன வைக்கவில்லை யாதலால் எல்லோரும் தாராள மாக நடந்து செல்ல வாய்ப்பு உண்டு. கடக்க வேண்டிய இடைவெளிகளை, குறியீட்டுக்காட்டி, அங்கங்கே வண்டிகள் நிற்க வேண்டிய குறியிடுகளை அமைத்துள்ளனர். எனவே சாலைகளில் நடப்பதற்கும் கடப்பதற்கும் கவலை இல்லை. சாலை ஓரங்களில் 100 மீட்டருக்கு ஒரு தொலைபேசி உள்ளது. எனவ்ே யாரும் தேவைக்கேற்ப (5, 1, , , பிராங்கு இட்டு) பேசிக்கொள்ளலாம். அப்படியே பலவிடங் களில் தபால்பெட்டிகள், வாய் முடியுள்ள நகரும் குப்பைத் தொட்டிகள் தெருவுதொறும் பலப்பலவிடங்களில் உள்ளன. இப்படிப் பலபல வசதிகள் இங்கே உள்ளன. - மொத்தத்தில் நான் முதலில் கூறியபடி பாரிசுக்கு நான் வந்தவேளை பொருத்தமானதாக இல்லை. நான்கு நாள் விடுமுறை - நல்ல மழை - இரண்டும் தடையாக இருந்தம்ை யாலும், நின்ைத்த அன்பர் தம் உதவி கிட்டாமையானும்