பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தார்ை போன்ற வாத்தியங்களை வாசித்துக்கொண்டும் தாளமிட்டுக்கொண்டும் ஆடியும் குதித்தும் கூத்து நவிற்றி யும் நின்ற நிலை கண்டு துணுக்குற்றேன். மேலும் அவர் களெல்லாம் பெரும்பாலும் வெளியூர்க்காரர்கள்ென்றும், இங்கே வந்து இப்படி ஆடிப் பிச்சை எடுக்கிறார்களென்றும் கூறினர். பல ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக ஆரவாரம் செய்து கூத்தடிக்கும் காட்சியும் கண்டேன். மேலும் சோதிடம் சொல்லிப் பலர் பிழைப்பதைப் பார்க்க முடிந்தது. நம்மைத்தான் சோதிடப்பித்து எனப் பலர் பரிகசிப்பதை எண்ணும்போது, இவர்களை அவர்கள் கண்டால் கண்மூடி மெளனியாவர்களென எண்ணினேன். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இத்தனை சோதிடர் களையும் கைரேகை பார்ப்பவர்களையும் காணமுடியாது. அப்படியே எதிரில் நிற்க வைத்து 15 நிமிடங்களில் நம் போன்று படம் எழுதித் தருவாரும் பலர் இருந்தனர். இவ் வாறு பலகடைகளையும் பிறவற்றையும் பார்த்துக் கொண்டே வந்த நண்பருடன் நான் நூல் நிலையத்துள் நுழைந்தேன். - நூல்நிலையம் எட்டு மாடிக் கட்டடமாயினும் கடந்து செல்வதற்கு மின்னியங்கு படிகள் இருந்தமையின் தொல்லை இல்லை. அடித்தளத்தில் எத்தனையோ சாமான்கள் இருந்தன. முதல் தளத்தில் பல மொழிகளில் நிலைத்த பெரு நூல்கள் இயற்றிய நல்லாசிரியர் தம் படங்களை எழுதி வரலாறு குறித்து, அவர்தம் நூல்களைப் பற்றிய விளக்கமும் தந்து அழகிய பொருட்காட்சிச் சாலை அமைந்திருந்தது. பரந்த இடம் விரைந்து சுற்றிப் பார்த்தோம். தமிழ்நாட்டுப் பேரறிஞர்கள் வள்ளுவரும் பாரதியும் கம்பனும் இளங்கோ வும் எங்கேனும் உளரா எனத் தேடினேன்; இல்லை. எனினும் மேலைநாட்டு மொழிக் கவிஞர்கள், நாவலாசிரியர் கள், தத்துவ மேதைகள் ஆகியோர் படங்களும் விளக்கங் களும் நிறைந்திருந்தன. தனித்தனி அறைகளில் தக்க பேரறிஞர் படங்களும் சிலைகளும் காட்சி தந்தன. அவை