பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

umຕື້ຄໍາ 7-4-85 61. பள்ளியின் ஒரு பக்கத்திலிருந்த ஒரு தானியங்கி வண்டி யினை, இரு மாணவர் ஒட்டிவிட்டு வகுப்புக்கு ஒன்றுமறியாத வராகச் செல்ல, அதை நிறுத்த ஆசிரியர்களும் முதல்வரும் பட்டபாடு கொடிது; அவர்கள் பட்டபாட்டைக்கண்டு, மேலே வகுப்பிலிருந்த மாணவர்கள் காகிதங்களைக் கிழித்து, அவர்கள் தலைமேல் கொட்டிய அவலநிலை என் உளத்தை சுட்டது. அப்படியே வகுப்பில் விசையால் கைதாளமிடும் ஒரு குரங்கு பொம்மையை மேல்வைத்து, அந்த வகுப்பில் ஆசிரியர் வந்ததும் அது தாளமிட்டுச் சிரிக்க, மாணவர்கள் கைகொட்டி நகைக்க, முதல்வர் வந்தும் அந் நிலை நீங்காத அவலம் என் உள்ளத்தைச் சுட்டது. இப்படியே இன்னும் பல. இவற்றை தொலைக்காட்சியில் காட்டினால் மற்ற மாணவர்களும் கெட்டுவிட மாட்டார்களா எ ன் று கேட்டேன். உடனிருந்த நண்பர் இதுதான் இங்குள்ள கல்விமுறையாதலால் யா ரும் கவலைப்படுவதில்லை என்றார். மேலும் எவ்வளவு தொல்லை தந்தாலும் மாணவரைக் கைதீண்டி அடிக்கலாகாது என்ற சட்டம் உண்டாம், மாணவர் என்ன செய்தாலும் ஆசிரியர் சகித்துக் கொள்ள வேண்டும் போலும். வகுப்பில் பாடம் நடக்கும் போதும் மாணவர்கள் கவனிக்காது. பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தனர். பாவம் ஆசிரியர் ஒன்றும் கேட்க முடியவில்லை. - அன்பர்கள் நல்ல உணவு செய்திருந்தனர். ஆறு நாட்களுக்குப் பிறகு நம் வீட்டு உணவினை அந்த யாழ்ப் பாண இளைஞர்கள் கையில் முதலாக உண்டு மகிழ்ந்தேன். என்னிடம் உள்ள மேசை விரிப்பு ஒன்றினை அவர்களுக்கு அ ன் பளி ப் பா. க த் தந்தேன். அவர்கள் அறையில் "திருவள்ளுவர் ஆண்டு எனத் தமிழில் அச்சிடப்பெற்ற நாள்காட்டி தொங்கியதைக் கண்டு, மகிழ்ந்தேன். அவர்கள் தம் நாட்டில் தமிழர்கள்படும் அவதியினையும் அவர்கள் பிற இடங்களில் பட்டுழல்வதையும் வருந்திக் கூறினர். அவர்தம் கண்ணிர் மாறும் காலம் விரைவில் வாராதா என எண்ணி