பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம் 9.4.85 மூன்று முழு நாட்கள் பாரிசில் கழிந்தன. இன்று போப் ஆண்டவர் உள்ள உரோம் செல்லவேண்டும். விடியல் எழுந்து காலைக்கடன்களை முடித்தேன். விடுதி அலுவலர் சரியாக ஐந்து மணிக்கு வந்து எச்சரித்தார். மூட்டைகளை யெல்லாம் கட்டினேன். மூன்று நாட்கள் பாரிசில் கழிந்ததை யெல்லாம் எண்ணிக்கொண்டே பெட்டிகளைச் சரி செய்தேன். சரியாக ஆறு மணிக்கு வாடகை மோட்டார் வந்தது. அதற்குள் அலுவலர் க்ாப்பி போட்டுத் தந்தார். (பொதுவாக இங்கே எட்டு மணிக்கு முன் காப்பி போட மாட்டார்கள்). அவருக்கு நன்றி சொன்னேன். கார் வாடகைக்கு இருநூறு பிராங்கு (சுமார் 300 ரூபாய்) என்ற னர். விடியுமுன் வந்தமையின் அதிகம் என்றார். வேறு வழியின்றி ஏறி அமர்ந்தேன். - பாரிசை இரவில் பார்க்கவேண்டும் என்றனர். முதலில் இறங்கிச் சென்றபோது பெருமழையாக இருந்தமையால் ஒன்றும் காணமுடியவில்ல்ை. இர்ண்டு இரவுகளிலும் உள்ளேயே சில இடங்களில் சுற்றியமையால், ஒன்றும் காண முடியவில்லை. எனவே இந்த இனிய விடியற்காலைப் பயணம் பாரிசின் இரவின் மின்னொளிச் சிறப்பை நன்கு காட்டிற்று. அந்த வேளையிலும் அடுக்கடுக்காக ஊர்திகள் விரைந்து சென்றன். மேலும் கீழும் சாலைகள் (பூமிக்குள் இரு இரெயில் சாலைகள்) உயர்ந்த மாடிக்கட்டடங்கள். சாலை கள் எல்லாம் நேருக்கு நேராக அமைந்திருந்தன. பல