பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI SAIWA SITHANTHA CHURCH-KAWAII-SEND OFF alsmršzil-Prof. Paramasivanandam Have a wonderful trip. Come back soon. Aum. . . Sadhaka Kaddiresan. 1.6-1985 தமிழ் நேசன் (கோலாலம்பூர்)-நாளிதழ். மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பிரிவு அவசியம் என்று வலியுறுத்திய பேராசிரியர் பரமசிவானந்தம் வருகை.

  • =

மலேயா பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிப் பிரிவு ஒன்றை அமைப்பதற்காகத் தமிழக அரசின் சார்பில் 194849ல் மலேயாவுக்கு வந்து பல மாநிலங்களுக்குச் சென்று ஆங்காங்கே உள்ள தமிழர்களைச் சந்தித்து, தமிழ் மொழி யின்பால் ஏற்பட்ட உணர்வினைக் கண்டறிந்து அவற்றைத் தமிழக அரசிடம் சொல்லி, மலேயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறியவர் தான் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம். நேசனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், அன்று மலேயா தமிழ்ச் சங்கம் நாடு முழுவதும் தமக்குத் துணையாக நின்று செயல்பட்டது என்றார். தற்போது தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். சுமார் இரண்டு மாதகாலம் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு இத்தாலி, சுவிஸ்சர்லாந்து, பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஆங்காங், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு, தாயகம் திரும்பும் வழியில் இங்கே ஒரு நாள் தங்கிவிட்டுச் செல்லுகையில் மேற்கண்ட பேட்டியைப் பேராசிரியர் வழங்கினார். பேராசிரியர் மேலும் தமிழ் மொழிக்கு அரும் பணியாற்றிச் சேவை செய்ய வேண்டுமென்று நேசன் தனது வாழ்த் தினைத் தெரிவித்துக் கொள்ளுகிறான். - - 11-6-85 சந்திப்பு-மு. முருகையன்