பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம் 9.4.85 . 69 கண்டோம். பலவற்றை விளக்கினார். பழைய ஊரே 2000 ஆண்டுகளுக்குமுன் பல மன்னர் தம் மாளிகைகள் உள்ள இடம் எனச் சுட்டினர். பிற இடங்களைக் காட்டினார். இரவு 9 வரை அக் காட்சிகளை கண்டு, அங்கேயே சிற்றுண்டி கொண்டு, நான் தங்கிய இடத்துக்குத் திரும்பிவந்தோம். என்னை என் அறையில் விட்டுவிட்டு அவர் தம் இடம் சென்றார். நானும் என் அறையில் சற்றே அமைதியாக இருந்து, பழைய உரோம மக்கள் யவனர் என்னும் பெயரோடு, தமிழ்நாட்டில் காவிரிபூம்பட்டினக் கடற்கரை யில் தமிழரோடு எவ்வெவ்வாறு கலந்து பழகினார் என்ற தன்மையினையும் அவற்றை விளக்கும் இலக்கியங்களையும் எண்ணி எண்ணி மயங்கினேன். எத்தனை சொற்கள் இரு மொழிகளில் மாறி இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்ல்ாம் எண்ணி, எண்ணிய நினைவு அளவில் உறக்கம் ஆட் கொண்டது.