பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரோம்-1 0-4-85 விடியல் 5 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித் துக் கொண்டேன். நான் தங்கிய விடுதி அமைதியாக இருந் தது. நிர்வகிக்கும் இரு தாயர் தெய்வநெறி பற்றி வழிபாடாற்றிக்கொண்டிருந்தனர் (7 மணி அளவில்). நான் ஒருமணி நேரம் இந்த நாட்குறிப்பை எழுதி முடித்தேன். 8.30க்குக் காலை உணவு தந்தனர். உணவு கொண்டபின் குழந்தைராஜ் சொல்லியபடி, போப்பாண்டவரைக் காணப் பதவிச் சீட்டினை பெறும் இடம் சென்றேன். (குழந்தைராஜ் வேறுபணியின் பொருட்டு வெளியே சென்றிருந்தார்.) சரி யாக 9 மணிக்கு நுழைவுச்சீட்டு பெறும் இடம் சென்றேன். முன் ஏற்பாட்டின்படி அவர்கள் என் பெயரிட்ட உறையில் ஒரு சீட்டு வைத்து, என் பெயர் சொன்னவுடன் எடுத்துத் தந்தனர். (குழந்தைராஜ் முன்னரே என் பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தார்.) அதைப் பெற்றுக்கொண்டு உலகில் பலரால் போற்றப்பெறும் உலக குருவினைக் காணப் போகிறோம் என்ற உணர்வோடு பெரு வாயிலில் நுழைந் தேன் (மிக அருகில் அமருவதற்கெனத் தனியான நுழைவுச் சீட்டு பெற்றமையால் அருகில் இருக்கும் வாய்ப்பு உண்டா யிற்று). அதே வேளையில் மற்றொரு உணர்வும் தோன்றிற்று. சென்ற வாரம் இதே வேளையில் நான் புறப்படு முன் உலக குரு (ஜெகத்குரு) காஞ்சி காமகோடிபீடம் சங்கராச்சாரி யாரைச் சென்னை மயிலாப்பூர் சென்று வணங்கி விடை