பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஏழு நாடுகளில் எழுபதுங்ாட்கள் - எண்ணுமாறு செய்தது. அத்தகைய - பழங்காலத்திய மரபினை இங்கே கட்டிக்காத்த நிலைகண்டு வியந்தேன். போப் சரியாகப் பதினொரு மணிக்கு மக்கள் கூட்டத் தினிடை புகுந்தார் என்றனர். எப்பக்கம் வருவார் என்று யாராலும் சொல்ல இயலவில்லை. திடீரென ஒரு பக்கம் மக்களிடையில் புகுந்து அவர்தம் வாழ்த்தையும் வணக்கத் தையும் ஏற்றுக்கொண்டு மெல்ல மேடை நோக்கி வந்தார். அவர் அசைவினை மாளிகையின் மேநிலையில் அமைந்துப் படமெடுக்கின்ற கருவி வழியே, எளிமையாகக் காண முடிந்தது. மக்கள் கூட்டத்தே - பலர் எழுந்து நின்றும் புகைப்பட மெடுத்தும் இருந்தமையால், தொலைவில் அவர் வரும் காட்சி அனைவருக்கும். புரியவில்லை. சரியாகப் 11.40க்கு மேடையில் அமர்ந்தார், அமைதி குடிகொண்டது. பிறகு அவர் முறையாக அனைவரையும் கைதுக்கி வாழ்த்தி யும் கைகுவித்து வணங்கியும்.நிற்க நிகழ்ச்சி தொடர்ந்தது. இது வழிபாட்டு நிகழ்ச்சியின்று. பல நாட்டவரும் பல சமயத்தவரும் சந்தித்துக் கொள்ளும் இடமாதலால் இதை வழிபடு கூட்டமாக்க்வில்லை போலும், பெரும்பாலும் அறிமுகக் கூட்டமாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்து வந்த நிறுவனங்கள் . கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் பெயர்கள் படிக்கப்பெற்றன; என் பெயரையும் சேர்த்துத் தான். என் பெயர் வெளிநாட்டில் - இந்தியாவிலிருந்து வந்தவர் என முன்னரே அங்கேபதிவுசெய்யப்பெற்றதல்லவா. எனினும் நம் மாணவர்கள்ை அழைத்துவ்ந்து, பள்ளியின் பெயரை போப் சொல்லி வாழ்த்த ஏற்பாடு செய்ய இயலுமா என நினைத்தேன். ஆஸ்திரேலியா, ஜப்பான் தொடங்கி அமெரிக்கநாடு வரை பல நாட்டிலிருந்து வந்தவர்களை வாழ்த்தினர். இத்தாலிய மொழியில், பிரஞ்சு மொழியில், ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் இருந்தன. முறையான் நிகழ்ச்சிக் குப்பின் 12.45க்கு சபை கலைந்தது. போப் ஆண்டவர் தம்மிடம் நோக்கிப் புறப்பட்டனர். மக்கள் கலையத் தொடங்கின்ர்: நானும் குழந்தைராஜ் இருந்த திருமடம்